காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி: இந்திய வீராங்கனை ஸ்ருதிக்கு தங்கம்

0
33

நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியின் அணிப் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ருதி ஜோஷி தங்கம் வென்றார்.

நைஜீரியாவின் லாகோவில் நேற்று நடைபெற்ற மகளிர் அணி சேபர் பிரிவில் இந்திய அணி முதலிடம் பெற்று தங்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியில் ஸ்ருதி ஜோஷியும் இடம்பெற்றிருந்தார்.

வீராங்கனை ஸ்ருதி ஜோஷி மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) பணியாற்றி வருகிறார். மேலும் இவர், இதே போட்டியின் மகளிர் தனிநபர் சேபர் பிரிவில் வெண்கலமும் வென்றிருந்தார். இதன்மூலம் இந்தப் போட்டியில் 2 பதக்கங்களை அவர் கைப்பற்றியுள்ளார். 2 பதக்கங்கள் வென்ற ஸ்ருதிக்கு சிஐஎஸ்எஃப் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here