குல்வீர் சிங் ‘ஹாட்ரிக்’ முதல் பூஜாவுக்கு வெண்கலம் வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்

0
12

ஆசிய விளையாட்டு போட்டி​யில் ஆடவருக்​கான 5 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் குல்​வீர் சிங் பந்தய தூரத்தை 13:32.75 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். நடப்பு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் குல்​வீர் சிங் வெல்​லும் 3-வது பதக்​கம் இது​வாகும்.

அவர், 1500 மீட்​டர் ஓட்​டத்​தி​லும் 10 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தி​லும் வெள்ளி பதக்​கங்​களை அவர் வென்​றிருந்​தார். இதன் மூலம் ஆசிய விளை​யாட்டு வரலாற்​றில் ஒரே தொடரில் தடகளத்​தில் ஹாட்​ரிக் பதக்​கம் வென்ற 2-வது இந்​திய வீரர் என்ற பெரு​மையை பெற்​றார் குல்​வீர் சிங்.

இதற்கு முன்​னர் 1951-ல் நடை​பெற்ற நடை​பெற்ற ஆசிய விளையாட்​டில் இந்​திய வீரர் லவி பின்டோ 100 மீட்​டர் ஓட்​டம், 200 மீட்​டர் ஓட்​டத்​தில் தங்​கப் பதக்​க​மும், 4×100 மீட்​டர் தொடர் ஓட்டத்தில் வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றிருந்​தார். அதேவேளையில் மகளிர் பிரி​வில் 1986-ம் ஆண்டு ஆசிய விளையாட்​டில் பி.டி.உஷா 4 தங்​கம், ஒரு வெள்ளி வென்று அசத்தியிருந்​தார். அவருக்கு அடுத்​த​படி​யாக 2002-ம் ஆண்டு நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டில் கே.எம்​.பீ​னாமோள் 3 பதக்​கம் வென்றிருந்​தார்​.

ராணுவ வீரர்​களுக்​கு பதக்கம் சமர்ப்​பிப்பு

ஆசிய விளை​யாடு போட்​டி​யில் துப்​பாக்கி சுடு​தலில் டிராப் பிரிவில் இந்​திய வீராங்​க​னை​யான நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இதுகுறித்து அவர் கூறும்​போது, “இந்​தப் பதக்​கத்தை எல்​லைகளைக் காக்​கும் ராணுவ வீரர்​களுக்​குச் சமர்ப்​பிக்​கிறேன். எல்​லைப்பகு​தி​யில் அவர்​கள் செய்​யும் தியாகத்​தோடு ஒப்​பிடும்​போது எனது சாதனை ஒன்​றுமே இல்​லை.

மேலும், 1978-ம் ஆண்டு பாங்​காக்​கில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் டிராப் பிரி​வில் தங்​கம் வென்ற முதல் இந்​தி​யத் துப்​பாக்​கிச் சுடு​தல் வீர​ரான ரந்​தீர் சிங்குக்​கும் இந்​தத்தங்​கப் பதக்​கத்​தைச் சமர்ப்​பிக்​கிறேன். அவர் மிக​வும் அன்​பான மனிதர். என்​னைச் சந்​திக்​கும் போதெல்​லாம் அரவணைத்​து, அறி​வுரை வழங்​கு​வார். நிச்​சய​மாக, ஒவ்​வொரு விளை​யாட்டு வீரரின் கன​வும் ஒலிம்​பிக் போட்​டிகளில் பங்​கேற்று நாட்​டுக்கு பெருமை சேர்ப்​பது​தான்​. இந்​தப்​ பதக்​கங்​கள்​ அந்​த இறு​தி இலக்​கை அடைவதற்​கான படிக்​கற்​கள்​ மட்​டுமே” என்​றார்​.

‘10 நாட்​களுக்கு முன் மருத்​து​வ​மனை​யில்’

ஆசிய விளை​யாட்டு போட்டி தொடங்​கு​வதற்கு 10 நாட்​களுக்கு முன்பு நீரு தண்டா கடுமை​யான காய்ச்​சலால் அவதிப்​பட்​டார். ஹெச்​1என்1 காய்ச்​சலாக இருக்​கலாம் எனச் சந்​தேகிக்​கப்​பட்ட நிலை​யில் போபால் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர், ஐந்து நாட்​களாக எதை​யும் உண்ண முடி​யாமல் அவதிப்​பட்​டார். இதனால் ஆசிய போட்​டி​யில் நீரு தண்டா பங்​கேற்​பதும், அவரது திறனும் பெரு​மளவு கேள்விக்​குறி​யாகவே இருந்​தன.

இருப்​பினும், அவரது தனிப்​பட்ட பயிற்​சி​யாள​ரும், முன்​னாள் சர்வதேச துப்​பாக்​கிச் சுடு​தல் வீரரு​மான மன்​ஷர் சிங், உடல்​நலக் குறைவை மறந்​து​விட்டு முழு​மூச்​சுடன் போராடு​மாறு நீரு தண்டாவை ஊக்​கு​வித்​தார். இதனால் உந்​துதல் பெற்ற நீரு தண்டா விரை​வாக குணம் அடைந்து ஜப்​பானுக்கு புறப்​பட்ட நிலை​யில் தற்​போது தங்​கப் பதக்​கம் வென்று நாட்​டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

உயரம் தாண்டுதலில் பூஜாவுக்கு வெண்கலம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மகளிருக்​கான உயரம் தாண்டுதலில் இந்​தி​யா​வின் பூஜா சிங் 1.84 மீட்​டர் உயரம் தாண்டி வெண்​கலப் பதக்​கம் வென்​றார். உஸ்​பெகிஸ்​தானின் பர்​நோகோன் சைஃபுல்​லாயேவா (1.90) தங்​கப் பதக்​க​மும், கஜகஸ்​தானின் கிறிஸ்​டினா ஓவ்​சின்​னிகோவா (1.87) வெள்​ளிப் பதக்கமும் வென்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here