குறைந்த சொத்துடைய முதல்வர்கள்: உமர் முதலிடம், சுவேந்து 2-ம் இடம்

0
18

நாட்​டின் குறைந்த சொத்​துடைய முதல்​வர்​கள் பட்டியலில் உமர் அப்​துல்லா முதலிடத்​தி​லும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதி​காரி 2-ம் இடமும் பிடித்​துள்​ளனர்.

மக்​களாட்சி சீர்​திருத்​தங்​களுக்​கான அமைப்பு (ஏடிஆர்) மற்​றும் தேசிய தேர்​தல் கண்​காணிப்​பகம் ஆகியவை தேர்​தல் பிர​மாணப் பத்​திரங்​களை பகுப்​பாய்வு செய்து அறிக்கை வெளி​யிட்​டுள்​ளன.

இந்த ஆய்​வின்​படி, ஜம்​மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா ரூ.55.24 லட்​சம் மதிப்​புள்ள சொத்​துகளு​டன் நாட்​டிலேயே மிகக் குறைந்த சொத்​துடைய முதல்​வ​ராக உள்​ளார்.

நாட்​டின் முதல்வர்களி​லேயே மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி இரண்​டாவது மிகக் குறைந்த சொத்​துள்ள முதல்​வ​ராக உள்​ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.85.87 லட்​சம் ஆகும்.

சிவகு​மாருக்கு அதிக சொத்து: அவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்​வர் பஜன் லால் சர்மா ரூ.1.03 கோடிக்​கும் அதிகமான சொத்​துகளு​டன் அடுத்த இடத்​தில் உள்​ளார்.

இதற்கு நேர்​மாறாக, கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் ரூ.1,413 கோடிக்கும் அதி​க​மான சொத்​துகளு​டன் அதிக சொத்​துடைய முதல்​வர்​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளார்.

ஆய்வு செய்​யப்​பட்ட 31 முதல்​வர்​களில் 4 பேர் (13 சதவீதம்) ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான சொத்​துகளைக் கொண்​டுள்​ளனர். மேலும், நாட்​டில் உள்ள 31 முதல்​வர்​களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.118.07 கோடி​யாக உள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here