Google search engine
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 13-வது நாளான நேற்று ஆடவ ஒற்றையர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 10 முறை சாம்பியனும், 7-ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவேரேவுடன் மோதினார். முதல் செட் டைபிரேக்கர் வரை சென்ற நிலையில் ஜோகோவிச் 6-7 (5-7) என பறிகொடுத்தார். இதன் பின்னர் ஜோகோவிச் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக...
ஹாக்கி இந்தியா லீக்கில் நேற்று ஆடவர் பிரிவில் ரூர்கேலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. தமிழக அணி தரப்பில் 4-வது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸும், 37-வது நிமிடத்தில் ஜிப் ஜான்சனும் கோல் அடித்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் 3-வது நிமிடத்தில் டிம் பிராண்டும், 59-வது நிமிடத்தில் மைகோ காசெல்லாவும்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது...
குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு விழாவில் பங்கேற்க பொதுமக்களில் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் அன்று மாலை நடைபெறும் விருந்தில் பங்கேற்க, தமிழக ‘கிராண்ட் மாஸ்டர்’ சகோதர, சகோதரியான பிரக்ஞானந்தா - வைஷாலிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் உள்ள கடமை பாதையில், பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள்,...
இங்கிலாந்து அணி இன்று சென்னையில் 2வது டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை ஆடுவதற்கு பனிமூட்டம் இடைஞ்சலாக இருந்ததாக இங்கிலாந்தின் வைஸ் கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியினரை சுனில் கவாஸ்கர் ‘புலம்பல்வாதிகள்’ என்று எப்போதும் ஏளனம் செய்வார். அது என்னவோ உண்மைதான் என்பது போல் ஹாரி புரூக் கூறியுள்ளார். நிலைமைகள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை, அதில்...
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி ஸ்ரீ ஜெயந்திரா எஸ்ஜிஜே அணிகள் மோதின. திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஜோஷ் ஷேன்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன்...
 சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் 2,784 ரேட்டிங் புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் தயான்சந்த் கேல் ரத்னா விருது பெற்ற அவர், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசியை (2,779.5) 5-வது இடத்துக்கு தள்ளி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அமெரிக்காவின் ஹிகாரு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களின் செயல் திறன் மோசமாக இருந்தது. இதனால் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடரின் 6-வது சுற்று தொடங்கியது. இதில் மும்பை - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை பிகேசி மைதானத்தில் நடைபெற்றது. மும்பை அணிக்காக...
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் மோதினார். 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 16-21, 21-12, 21-23 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ்...