ரஞ்சி டிராபி 6-வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அபாரமாக ஆடி வந்த போது ‘இப்படியும் ஒருவர் ரன் அவுட் ஆக முடியுமா’ என்று கேள்வி எழுப்பும் விதமாக ரன் அவுட் ஆனது பேசுபொருளாகியுள்ளது.
கொல்கத்தா அருகேயுள்ள கல்யாணியில் பெங்கால் அணி, சர்வீசஸ் அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இதில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அற்புதமாக...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்கள் சேர்த்தனர். நாராயணன் ஜெகதீசன்...
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க் கஜேர்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்துவின் 500-வது வெற்றியாக இது அமைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 21-10,...
ஆப்கானிஸ்தான் - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு துபாயில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டார்விஷ் ரசூலி 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், செதியுல்லா டேல் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் சேர்த்தனர்....
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன.
இதற்கிடையே வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 5-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தையும், 4-ம் நிலை வீரரும், 10...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான டேரில் மிட்செல்.
இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்றிருந்தது. இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேனான 34 வயதான டேரில் மிட்செல் 2 சதம், ஒரு அரை...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
2-வது ஒருநாள் போட்டி 24-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி 27-ம் தேதியும் இதே மைதானத்தில் நடைபெறுகிறது. டி 20 தொடரின் ஆட்டங்கள்...
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் மனாமி சூயிசுடன் மோதினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி காந்த்,...