இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து முலான்பூரில் நடைபெற்ற 2-வது...
கேமரூன் கிரீன் முதல் கார்த்திக் சர்மா வரை: அதிக தொகைக்கு வசமான வீரர்கள் @ ஐபிஎல் மினி ஏலம்
admin - 0
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேமரூன் கீரீன்.
இந்த வகையில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு...
ஆஷஸ் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்மித் விலகியது திடீர் திருப்பமாக அமைந்ததோடு, கிரிக்கெட் கரியர் முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்.
இன்று டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஸ்மித் ‘தலைசுற்றல்’ காரணமாக விலகியதாக தெரிவித்தது. இன்று காலை வலைப்பயிற்சிக்குப் பிறகே ஸ்மித் கேப்டன் கமின்ஸ் உடனும், கோச் மெக்டொனால்ட் உடனும் பேசினார். பிறகு...
எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நாளை (டிச.16) அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 350 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், வீரர்களை தக்க வைத்தது, விடுவித்தது, டிரேட் செய்தது போக 10 ஐபிஎல் அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை பார்ப்போம்.
இந்த ஏலத்துக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான டிரேடிங் அதிகளவில் கவனம் ஈர்த்தது. சிஎஸ்கே ஜடேஜாவையும், ராஜஸ்தான்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி வீரர்கள் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றுள்னனர். இதில் இருந்து 31 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.
இதற்காக 10 அணிகளும் கூட்டாக ரூ.237.55 கோடியை செலவிட உள்ளன. இந்த ஏலத்தை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சானல் மற்றும் ஜியோஸ்டார் செயலி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஒவ்வொரு...
அர்ஜெண்டினா அணியின் கால்பந்து நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி கடந்த 14-ம் தேதி வணிக நோக்கிலான 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தனது குழுவினருடன் இந்தியா வந்தார்.
அவருடன் சக அணியைச் சேர்ந்த ரோட்ரிகோ டி பால், உருகுவே கால் பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் கொல்கத்தா, ஹைதரபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான நேற்று டெல்லியில் உள்ள அருண்...
>> இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் உடல் நலமின்மை காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
>> இந்திய அணிக்காக விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வரும் 24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் குறைந்தது 2 ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும் என பிசிசிஐ...
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர் ‘கோட் இந்தியா டூர்’ எனும் பெயரில் இன்று (13-ம் தேதி) முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மெஸ்ஸி, இந்தியாவுக்கு வருகை தருவது இது 2-வது முறையாகும். கடைசியாக அவர், கடந்த 2011-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பங்கேற்றிருந்தார்.
ஆனால் இம்முறை மெஸ்ஸி...
எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. 12 நாடுகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, டீகன் ரஸ்ஸலுடன் மோதினார். அதில் ஜோஷ்னா 7-4, 7-4, 7-2...
மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து தொடரை 10-வது இடத்துடன் நிறைவு செய்தது.
ஸ்பெயின் அணி சார்பில் நடாலியா விலனோவா (16-வது நிமிடம்), எஸ்தர் கேனல்ஸ் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல்...