எதிரணிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்: சொல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி
admin - 0
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி கூறியுள்ளார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணணையாளரான எல்.பாலாஜி அளித்த சிறப்பு பேட்டி:
இது 18-வது சீசன். இந்த தொடரின் வாயிலாக அதிக அளவிலான இளம் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது....
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவுடன் மோத உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா முதற்கட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஜஸ்பிரீத் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர்,...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று இணையதளம் வாயிலாக நடைபெற்றது. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இம்முறை வலுவாக களமிறங்குகிறது. முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ்.தோனி முழு உடற்தகுதியுடன் இருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும். கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய தோனி கேமியோ ரோல் மட்டுமே செய்தார். இறுதிக்கட்ட ஓவர்களில் களமிறங்கி 8 முதல் 10 பந்துகளை சந்தித்து பெரிய அளவிலான சிக்ஸர்களை பறக்கவிட்டு...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அறிமுகமான முதல் 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. அதேவேளையில் கடந்த ஆண்டு 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை அதிரடி வீரரான ரிஷப் பந்த்தை மெகா ஏலத்தின் போது பெரும் தொகைக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்வாகம். இம்முறை அவரை சுற்றியே லக்னோ அணி கட்டமைக்கப்பட்டுள்ளது.
அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர்....
நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடைபெற்றது. மழை காரணமாக 15 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 135 ரன்கள எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ஷதப் கான் 14 பந்துகளில்,...
கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அமைதியாக, நிதானமாக செயல்பட்டால், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாகப் பயன்படுத்தலாம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: "ஐபிஎல் விளையாடத் தொடங்கி 11 ஆண்டுகளாகிறது. ஒவ்வொரு சீசனும் புதிய ஆற்றலையும், நேர்மறை உணர்வையும் தருகிறது. கடந்த சீசன் எங்கள் அணிக்கு சவாலாக இருந்தது, ஆனால் அதிலிருந்து விலைமதிப்பற்ற பாடங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை,...
டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 18-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டரான அக்சர் படேல், கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது துணை கேப்டனாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதான, டு பிளெஸ்ஸிஸ் கடந்த 3 சீசன்களிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி சம பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (19-ம் தேதி) காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் தொடங்கும் என்று...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய 3 மைதானங்களின் சீரமைப்பு பணிக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.504 கோடியை செலவிட்டிருந்தது. இது ஏற்கெனவே மதிப்பிட்ட தொகையைவிட 50 சதவீதம் அதிகரித்திருந்தது.
தொடர்ந்து போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளுக்கான என ஒட்டுமொத்தமாக ரூ.868 கோடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்திருந்தது. ஆனால் இதுவரை...










