வரும் 4-ம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி போட்டி என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.
39 வயதான உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது 4. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட கவாஜா, ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தேசிய அணியில்...
2026-ம் ஆண்டில் 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுடன் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் இந்த ஆண்டு முழுவதும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்டின் தொடக்கத்திலேயே ஜனவரி 9-ம் தேதி முதல் மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் (டபிள்யூபிஎல்) இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியில் ஜோஷ் டங் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணி பிப்ரவரி 8-ம் தேதி மும்பையில் நடைபெறும் போட்டியில் நேபாளத்துடன் மோதவுள்ளது.
உலகக்...
பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி காயம் அடைந்துள்ளதால் அந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளராக இருப்பவர் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆவார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் மருமகன் தான் இந்த ஷாஹீன் ஷா அப்ரிடி. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் கிரிக்கெட் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட்...
திருச்செங்கோட்டில் புதிய கிரிக்கெட் பயிற்சி மையத்தை சூப்பர் கிங்ஸ் அகாடமி தொடங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி நிர்வாகம் சார்பாக சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இளம் வயதில் உள்ள திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இந்த அகாடமி பல பயிற்சி மையங்களை பல்வேறு நகரங்களில் தொடங்கி வருகிறது.
அதன்படி திருச்செங்கோட்டிலுள்ள கேஎஸ்ஆர் கல்வி நிறுவன...
நான்காவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. டபிள்யூபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலிய...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வரும் ஜனவரி 6-ம் தேதி மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தங்கள் மாநிலம் சார்ந்த அணிக்காக களமிறங்கி விளையாடி வருகின்றனர். அதன்படி விராட் கோலி, டெல்லி அணிக்காக கடந்த வாரம் 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரை சதம்...
உலக விரைவு செஸ் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கத்தார் நாட்டிலுள்ள தோஹா நகரில் உலக விரைவு மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல் அறிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்காக 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டக் பிரேஸ்வெல் விளையாடியுள்ளார். 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 74 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். மேலும் பேட்டிங்கில், 568 ரன்களும் எடுத்துள்ளார்.
21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 விக்கெட்களும் சர்வதேச டி20 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் என சர்வதேச...