ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. 175 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி பில் சால்ட் (56), விராட் கோலி (59), ரஜத் பட்டிதார் (34) ஆகியோரது அதிரடி பேட்டிங்கால் 22 பந்துகளை மீதும் வைத்து வெற்றி கண்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக தொடக்க வீரர்களான...
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. தொடரை நடத்துவதால் இந்த 3 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதை தவிர்த்து தற்போது முதல் அணியாக ஜப்பான் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று தனது சொந்த மண்ணில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணி, பக்ரைனை எதிர்த்து விளையாடியது. இதில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல்...
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பளபளப்பாக மாற்றுவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இந்த விதிமுறை ஐபிஎல் தொடரிலும் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் நேற்று ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மற்றும் பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.58 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய கேப்டன் அக்சர் படேல் தலைமையில் களமிறங்குகிறது. தொடரில் கலந்து கொண்ட 10 அணிகளில் டெல்லி அணியின் கேப்டன் மட்டுமே கடைசியாக அறிவிக்கப்பட்டார். ரிஷப் பந்த், லக்னோ அணிக்கு மாறியுள்ளதால் கேப்டனாக அக்சர் படேல் எப்படி செயல்பட போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். வலுவான போட்டியாக திகழும் டெல்லி அணி இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2020-ம்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக சீசனான 2008-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த 3 சீசன்களிலும் அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தியது. 2022-ல் 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி, அடுத்த ஆண்டில் 5-வது இடம் பிடித்தது. கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் இந்த சீசனில் முதல் 3 ஆட்டங்களுக்கு ரியான் பராக்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்த அணி 6 முறை 200-க்கும் அதிகமான ரன்களை குவித்து மிரட்டியது. இதில் ஐபிஎல் வரலாற்றில் சாதனையாக குவிக்கப்பட்ட 287 ரன்களும் அடங்கும்.
இதுதவிர அந்த சீசனில் 277 மற்றும் 266 ரன்களையும் விளாசியிருந்தது. லீக் சுற்றை 2-வது இடத்துடன் நிறைவு செய்திருந்த ஹைதராபாத்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
கடந்த சீசனில் 3 ஆட்டங்களில் ஓவர்கள் வீச மும்பை அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டிருந்தது. இதனால் இந்த...
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சார்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 856 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதிரடி வீரர்களான திலக் வர்மா (804), சூர்யகுமார் யாதவ் (739)ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர். இங்கிலாந்தின் பில் சால்ட் 815 புள்ளிகளுடன் 3-வது...










