Google search engine
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி, இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியை, 1996-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த இலங்கை வீரர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களைப் பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, இதுதொடர்பாக தனது...
ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஆடையணிந்து விளையாடினர். இதுதொடர்பான தகவலை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அதில், பெங்களூரு அணி வீரர்களின் இந்த சிறப்பான பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2011-ம் ஆண்டு முதலே ஆர்சிபி அணி...
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 117 ரன்கள் வித்தியாசத்தில் சாய்ராம் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்எம்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக ராஜஸ்தான்...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இந்த ஆட்டம் 77-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. கால் இறுதி போட்டி இரண்டு கட்டமாக நடைபெறும். இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு முறை பலப்பரீட்சை நடத்த உள்ளனர். நார்வே வீரரான...
ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யுடன் மோதுகிறது. காயம் காரண​மாக ருது​ராஜ் கெய்க்​வாட் இந்த சீசனில் இருந்து முழு​மை​யாக விலகி உள்​ள​தால் எம்​.எஸ்​.தோனி தலை​மை​யில் களமிறங்​கு​கிறது சிஎஸ்கே அணி. ஐபிஎல் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி,...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டனான வெங்கடேஷ் ஐயர் கூறும்போது, “சேப்பாக்கம் ஆடுகளத்தில் அதிக அளவிலான சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இந்த சீசனிலும் சரி, கடந்த சீசனிலும் சரி வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். கடந்த சீசன் இறுதிப் போட்டியில் முதல் 5 விக்கெட்களை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் கைப்பற்றினர். ஆடுகளம் எந்த வகையில் சாதகமாக இருக்கிறது என்பது குறித்து நாங்கள்...
சென்னை அடுத்த கவரப் பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரி அணி, சாய்ராம் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த சாய்ராம் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது....
அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்டி நடை​பெற உள்​ளது. இந்த ஒலிம்​பிக் போட்​டி​யில் கிரிக்​கெட் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 128 வருடங்​களுக்​குப் பிறகு கிரிக்​கெட் விளை​யாட்டு ஒலிம்​பிக்குக்கு திரும்பி உள்​ளது. இந்​நிலையில், போட்டி அமைப்​பாளர்​கள் லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் கிரிக்​கெட்​டில் 6 அணி​கள் மட்​டுமே கலந்து கொள்ளும் என உறுதி செய்​துள்​ளனர். ஆடவர் பிரி​வில் 6 அணி​களும், மகளிர் பிரி​வில் 6 அணி​களும் கிரிக்​கெட்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி,...