ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூஸிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான ஆடம் மில்னே காயம் காரணமாக விலகி உள்ளார்.
ஆடம் மில்னே கடந்த ஞாயிற்றுக்கிழமை தென்...
ஆப்கானிஸ்தான் – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டம் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பிரண்டன் கிங் 35 பந்துகளில், 47 ரன்கள் எடுத்தார். 151 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்கள் சேர்த்தனர். நிதிஷ் ராஜகோபால் 54, கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்....
ஆஸ்திரேலிய ஓபன்: 4-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி அதிர்ச்சி தோல்வி
admin - 0
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 6-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 37-ம் நிலை வீரரான பிரான்ஸின் கோரன்டின் மவுடெட்டை...
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருந்தன. காயம் காரணமாக அக்சர் படேல் களமிறங்கவில்லை. அதேவேளையில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டனர். நியூஸிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன....
கொழும்பில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 19 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி இலக்கை விரட்டி 49.2 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி...
ரஞ்சி டிராபி 6-வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அபாரமாக ஆடி வந்த போது ‘இப்படியும் ஒருவர் ரன் அவுட் ஆக முடியுமா’ என்று கேள்வி எழுப்பும் விதமாக ரன் அவுட் ஆனது பேசுபொருளாகியுள்ளது.
கொல்கத்தா அருகேயுள்ள கல்யாணியில் பெங்கால் அணி, சர்வீசஸ் அணிக்கு எதிராக ஆடி வருகிறது. இதில் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 81 ரன்களில் அற்புதமாக...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்கள் சேர்த்தனர். நாராயணன் ஜெகதீசன்...
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க் கஜேர்ஃபெல்ட்டை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்துவின் 500-வது வெற்றியாக இது அமைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 21-10,...
ஆப்கானிஸ்தான் - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு துபாயில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டார்விஷ் ரசூலி 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், செதியுல்லா டேல் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் சேர்த்தனர்....