ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இலங்கையின் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 5 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு...
பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியின் ஒரு ஆட்டத்தை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அமைப்புடன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியைப் போல பிக் பாஷ் லீக் (பிபிஎல்) போட்டி, ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடராகும். இந்நிலையில் பிபிஎல் போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக அடுத்த சீசனின் ஒரு ஆட்டத்தை மட்டும்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு ‘டி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - கனடா அணிகள் மோதுகின்றன. நியூஸிலாந்து அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும்.
அந்த அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக அணிகளை வீழ்த்தியிருந்தது. இந்த 2 ஆட்டங்களும் சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெற்றிருந்தது. தொடர்ந்து...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஆர்யன்ஷ் சர்மா 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்திலும், கேப்டன் முகமது வசீம் 10 ரன்களில்...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்த ஆட்டம் இலங்கையின் கண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த...
பயணிக்கும் அணிகள் அதன் உள்நாட்டு கிரிக்கெட் ஆடும் பவுலர்களை வலைப்பயிற்சிக்கு அழைத்து தங்கள் பேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், இது வழக்கமானதே. ஆனால் நெதர்லாந்து வழக்கத்திற்கு மாறாக குஜராத் கிரிக்கெட் அணியின் கேப்டனை ‘நெட் பேட்டர்’ ஆக அழைத்து விசித்திர கோரிக்கை வைத்துள்ளது.
திங்களன்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தை அணுகிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் நெட் பேட்டர், அதுவும் இடது கை பேட்டர் தேவை.. அனுப்ப முடியுமா? என்ற...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்விவை கடுமையாக விமர்சித்திருந்தார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். தற்போது அந்த கருத்தை அவர் திரும்பப்பெற்றுள்ளார்.
“மோசின் நக்வியை நான் விமர்சிக்கவில்லை. தகுதியற்றவர் என்ற எனது கருத்து அவர் குறித்து சொன்னது அல்ல. எனது கருத்தை ஊடகங்கள்...
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி அதிகாரபூர்வமாக 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல்...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சல்மான் அலி ஆகா வீசிய...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், நேபாள அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபேந்திர சிங் ஐரி 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள்...









