Google search engine
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஹராரேவில் நேற்று தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிகந்தர் ராஸா 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். பிரையன் பென்னெட் 30, ரியான் பரூல் 29 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க...
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது அதை ஆக்ரோஷமாக கொண்டாடிய முகமது சிராஜ், பென் டக்கெட் தோள் பட்டையை இடித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முகமது சிராஜுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியையும், போட்டியின் ஊதியத்தில் 15 சதவீதத்தையும் அபராதமாக விதித்துள்ளது ஐசிசி. இந்தப் போட்டியில் சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித்,...
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி உச்சபட்ச நாடகங்களுடன் இங்கிலாந்து வெற்றியில் முடிவடைந்தது. இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இருதயம் உடைந்த தருணமே தோல்வி. ஆனால், ஜடேஜா என்னும் போர் வீரன், ‘தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா’ என்று விக்ரமாதித்ய கதைகளில் வரும் வரிகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்து இறுதி வரை வீழ்த்தப்பட முடியாத வீரராக நின்றார். ஆனால், கண்களிலோ சோகம். கோபக்கனல் உடன் எதிரணி வீரர்களை எதிர்கொண்டு வார்த்தையாடல் செய்த சிராஜின் சிரசு...
 இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் ஆட்டமிழந்ததை ஆக்ரோஷத்துடன் கத்திக் கொண்டாடினார் இந்திய வீரர் முகமது சிராஜ். இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை நேற்று தொடர்ந்து விளையாடியது. அப்போது களத்தில் பென் டக்கெட் - கிராவ்லி ஜோடி விளையாடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் சிராஜ் வீசிய பந்தை டக்கெட் அடிக்க முயல, அது பும்ராவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. 12 ரன்களில் டக்கெட் ஆட்டமிழந்ததை சிராஜ் ஆக்ரோஷமாக...
 நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர். இதன் மூலம் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸில் அவர் சாம்பியன் பட்டம் வென்றார். உலகின் முதல் நிலை வீரரான 23 வயது ஜன்னிக் சின்னர் மற்றும் இரண்டாம் நிலை வீரரான 22 வயது கார்லோஸ் அல்கராஸ் இடையிலான...
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. புதுச்சேரி சீகெம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் முதலில் விளையாடிய ஜெனித் யானம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. வேதாந்த் பரத்வாஜ் 104, ஆதித்யா கர்வால் 76, பரமேஷ்வரன் சிவராமன் 28 ரன்கள் எடுத்தனர் பின்​னர்...
 எம்சிசி முருகப்பா ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் ஹாக்கி கர்நாடகாவைச் சாய்த்தது. கடற்படை அணியின் சுஷில் தன்வார் 3 கோல்களையும் (3, 20, 34-வது நிமிடங்கள்), பிரசாந்த் ஒரு கோலையும் அடித்தனர். கர்நாடகா அணி தரப்பில் பாரத் மகாலிங்கப்பா...
நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ரூதர்போர்ட் பகுதியில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது. முதல் 10 நிமிடங்களுக்கு பந்தை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தது செல்சீ. அதன் பிறகே...
இந்திய தடகள வீரரும், ஸ்டீபிள்சேஸ் ஓட்டப்பந்தய வீரருமான அவினாஷ் சாப்ளே காயமடைந்துள்ளார். மொனாக்கோவில் தற்போது டயமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பங்கேற்ற அவினாஷ் சாப்ளே தவறி கீழே விழுந்து காயமடைந்தார். வாட்டர் ஜம்ப் பகுதியில் அவர் குதிக்கும்போது கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு மூட்டு, கால், தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து...
எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா - தமிழ்நாடு மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. மகாராஷ்டிரா அணி சார்பில் 22-வது நிமிடத்தில் ரோகன் பாட்டீலும், தமிழ்நாடு அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் சோமன்னாவும் கோல் அடித்தனர். ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கர்நாடகா அணி...