ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் லெவன் அரோனியன் 1.5-0.5 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் மோக் நீமனை தோற்கடித்து முதலிடம் பிடித்தார்.
3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 1.5-0.5 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை தோற்கடித்தார். இந்தியாவின் அர்ஜுன்...
பாகிஸ்தான் உடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது வங்கதேசம். வேகப்பந்து வீச்சாளர்கள் டஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற...
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் விலகியதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறஇருந்த போட்டி ரத்தானது.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய...
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளதால் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் இணையவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில்...
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
கிரிக்கெட் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை, ஸ்பான்சர்ஷிப் ஆகிய பிரச்சினைகள் காரணமாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்துவதாக ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி...
போர்ச்சுகலில் நடைபெற்ற மையா சிடாடே டோ டெஸ்போர்டோ 2025 தடகளப் போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் வென்றார். இந்தப் போட்டிகள் போர்ச்சுகலின் மையா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்தப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பிரிவில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர், 7.75 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். போலந்து வீரர் பியோட்டர் டார்கோவ்ஸ்கி 2-வது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் மித்ரேவ்ஸ்கி...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதன்படி ஐபிஎல் மூலமாக பிசிசிஐ-க்கு கிடைத்த வருவாய் பங்குமட்டும் ரூ.5,761 கோடியாக உள்ளது. மேலும், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் உலகளாவிய உரிமைகள், ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை மூலமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான வருவாய் ஆதாரத்தை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. ஐபிஎல்...
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஹராரேவில் நியூஸிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெஸ்லி மாதவரே 32 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். பிரையன் பென்னட் 21, டோனி முன்யோங்கா 13, கேப்டன்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்தாம்டனில் நடைபெற்றது. இதில் 259 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 18-வது ஓவரின் போது இந்திய தொடக்க வீராங்கனையான பிரதிகா ராவல், ஒரு ரன் எடுப்பதற்காக ஓடிய போது இங்கிலாந்து...
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று யு-19 மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மயிலாப்பூர் கிளப்பை சேர்ந்த என்.ஷர்வானி 11-5, 11-2, 11-7 என்ற செட் கணக்கில் எஸ்.வர்ஷினியை (பிடிடிஏ) வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால்பதித்தார். ஹன்சினி (சென்னை), நந்தினி (எம்விஎம்), மெர்சி (ஏசிஇ), ஷாமீனா ஷா (மதுரை), அனன்யா (சென்னை அச்சீவர்ஸ்), புவனிதா...










