ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜன் நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் அவர், 3 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.9 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
டெல்லி அணி தனது 4-வது ஆட்டத்தில் இன்று சிஎஸ்கேவுடன் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்த போட்டியையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது டி.நடராஜன் கூறியதாவது:...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த அணியில் அணியின் இளம் பேட்ஸ்மேனான 21 வயதான முகுல் சவுத்ரியின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி 16 ஓவர்களில்...
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் ஆயுஷ் ஷெட்டி – ஹெச்.எஸ்.பிரனாய், பி.வி.சிந்து வெளியேற்றம்
admin - 0
சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத்தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 20-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஷி யு ஜென்னுடன் மோதினார். இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கால் இறுதி சுற்றில் போட்டித்...
போட்ஸ்வானா நாட்டில் பிசிஏ கலாஹாரி மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கபோரோனில் உள்ள போட்ஸ்வானா கிரிக்கெட் சங்கத்தின் ஓவல் 2 மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லெசோதோ - பிரேசில் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பிரேசில் 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மோனிகே மச்சாடோ 69, ரோபர்டா ஏவரி 48 ரன்கள் விளாசினர். 203 ரன்கள் இலக்குடன் பேட்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டங்களையும் ஆர்சிபி அணி தனது சொந்த...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணிக்கு பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது.
அப்போது அதிரடி வீரர்களான விப்ராஜ் நிகாம், டேவிட் மில்லர் ஜோடி களத்தில் இருந்தது. விப்ராஜ் நிகாம் முதல் பந்தை...
மங்கோலியாவின் உலான்பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுந்தரி என்க்-அம்கலனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த சீன தைபேவின் ஹுவாங் ஹியாவோ...
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு...
சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி பெங்குடன் மோதினார்.
51 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 30-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி...
பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான ஆசியா-ஓசியானா குரூப் 1 டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் தாய்லாந்தை எதிர்த்து விளையாடியது.
இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி அட்கர் 1-6, 3-6 என்ற செட் கணக்கில் அஞ்சிசா சாண்டாவிடம் தோல்வி அடைந்தார். இதன் பின்னர் மழை காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. 2-வதாக...









