நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை செய்கிறது.
துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெறுகின்ற அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்...
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்தவாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரை அகமதாபாத்தில்...
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று இரவு இந்தியா - இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. சூப்பர் 4 சுற்றில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி...
இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 420 ரன்களும், இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களும் எடுத்தன. 226 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது.
நேற்று...
இந்திய மைதானங்களில் பார்வையாளர் மாடத்தில் இருந்து வரும் மக்களின் ஆரவாரம் சிறப்பானது என இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
வரும் 30-ம் தேதி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் இந்த தொடரின் முதல் சுற்று நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும்...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான சாஹிப்ஸதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்தில்...
நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 2024-25 சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக சிறந்த பங்களிப்பை அவர் வழங்கினார். அது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.
சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் Ballon d'Or விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் மறுத்துவிட்டார்.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற...
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி, தென் கொரிய ஜோடியும், உலக சாம்பியனுமான கிம் வான் ஹோ, சியோ செங் ஜே ஜோடியுடன் மோதியது.
இதில் தென் கொரிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை...
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டதால் தோல்வி கண்டோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டி20 வடிவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற சூப்பர்-4 சுற்று முதல் ஆட்டத்தில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின.
முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள்...






