விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. டெல்லி வீரர்கள் ரிஷப் பந்த், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் டெல்லி, குஜராத் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் உத்தரபிரதேச அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் சண்டீகர் அணியை சாய்த்தது. உ.பி.அணியின் கேப்டன் ரிங்கு சிங், ஆர்யன் ஜுயால் ஆகியோர் சதம் விளாசினர்.
ராஜ்கோட்டில் உள்ள சனோசரா மைதானத்தில் நேற்று இந்தப் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய உ.பி. அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யன் ஜுயால் 118 பந்துகளில் 134...
ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டுகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி சுருட்டி பதிலடி கொடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி...
தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய மகளிர் அணி: 3-வது டி20 போட்டியில் இன்று இலங்கையுடன் மோதல்
admin - 0
இந்தியா, இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
இலங்கை அணி, 5 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில்...
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் போன்று, 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார். அவரை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மைதானங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில்...
தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவின் கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு ஸ்ருதி முண்டாலா, தன்வி பத்ரி ஆகியோர் முன்னேறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 87-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு போட்டியில் ஸ்ருதி முண்டாலா 21-14, 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் ஜியா ராவத்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு மகளிர் பிரிவு ஆட்டத்தில் தன்வி...
உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யூஎப்) சார்பில் செயல்படும் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இந்த ஆணையத்தில் உறுப்பினராக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். மேலும், 2020ம் ஆண்டு முதல் உலக...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மான்டி பனேசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மான்டி பனேசர். இவர் இங்கிலாந்து அணிக்காக 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் வரை விளையாடியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து...
286 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்: ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் – ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3-வது டெஸ்ட்
admin - 0
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 109, உஸ்மான் கவாஜா 82 ரன்கள்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து முலான்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க...
