Google search engine
தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றது. இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு...
வெற்றிக் கோப்பையுடன் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல் வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். பின்னர் மதியம் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது....
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் 2-1 என்றகோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி அணி. ஜெர்மனியின் லைப்சிக் மைதானத்தில் நேற்று நடைபெற்றநாக்-அவுட் சுற்றின் கடைசி ஆட்டத்தில் துருக்கி - ஆஸ்திரியாஅணிகள் மோதின. முதல் நிமிடத்திலேயே துருக்கி கோல் அடித்து அசத்தியது. கார்னரில் இருந்து அர்டா குலர் அடித்த பந்தை அப்துல்கரிம் பர்தாக்கி துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார்....
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. புயலால் பார்படாஸ் விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் கரையை கடந்த...
செல்டன்ஹாமில் நேற்று முடிவடைந்த கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் குளஸ்டர்ஷயர் அணியும் கிளாமர்கன் அணியும் போட்டியை வரலாற்று ‘டை’ செய்தது. 593 ரன்கள் வெற்றி இலக்கை சேஸ் செய்து கிளாமர்கன் அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி போட்டி வரலாற்று டை ஆனது. குளோஸ்டர்ஷயர் அணி 179 மற்றும் 610/8 டிக்ளேர் செய்ய கிளாமர்கன் 197 மற்றும் 592 ரன்கள். கிளாமர்கன் கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் சேசிங்கின் போது 187...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய அணி,...
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மூவர் கூட்டணியின் அற்புதமான செயல்பாட்டால் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வசமாகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதற்கு...
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்றது. சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள்...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்...