ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி வெற்றி பெற்றால், லீக் வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா எஃப்சி அணியை இரு முறை வீழ்த்தி சாதனை படைக்கலாம். கடந்த செப்டம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அந்த அணியை 3-2 என்ற...
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 10 விக்கெட்களை வீழ்த்திய ஸ்காட் போலண்ட்...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் பிரணாய்,...
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான டிடிஜிடி ஒலிம்பியாட் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. 10 அணிகள் கலந்து கொண் இந்தத் தொடரில் விருகம்பாக்கத்தில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் 50-23 என்ற கணக்கில் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற...
இலங்கை அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை நியூஸிலாந்து அணி 2-0 என தன்வசப்படுத்தியது. ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக 37 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 37 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு...
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பனோ ஆலிவெட்டி ஜோடி 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ், இங்கிலாந்தின் லூக் ஜான்சன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில்...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழை காரணமாக மேற்கூரை ஒழுகியது. ஆடுகளத்தின் இடது பகுதியில் மழைநீர் தேங்கத் தொடங்கியதால் போட்டி நடுவரிடம் பிரணாய் புகார் தெரிவித்தார்....
யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி வரும் ஜனவரி 14 முதல் 19-ம் தேதி வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் நடைபெறுகிறது. பிடபிள்யூஎஃப் உலக டூர் 750 சூப்பர் தொடரான இதில் இந்தியாவின் சவாலை பி.வி. சிந்து, லக்சயா சென் ஆகியோர் தோளில் சுமக்க உள்ளனர். ஒலிம்பிக் சாம்பியன்களான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், தென் கொரியாவின்...
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீழ்த்துவது எப்படி என்பதை நாங்கள் அறிவோம் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. அண்மையில் இந்திய அணிக்கு எதிரான பார்டர்...
குஜராத் மாநிலம் வடோதராவில் யுடிடி 86-வது ஜூனியர் மற்றும் இளையோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான யு-19 ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ஹன்சினி, ஹரியானாவைச் சேர்ந்த சுகானா சைனியை எதிர்த்து விளையாடினார். இதில் ஹன்சினி 4-2 (1-11,11-9, 13-11,11-9, 10-12,11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.