Google search engine
ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி தங்களது முதல் ஆட்டத்தில் இத்தாலியின் சிமோன் பொலேலி, ஆண்ட்ரியா வவஸ்சோரி ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் போபண்ணா - எப்டன் ஜோடி 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டம் 56 நிமிடங்கள் நடைபெற்றது. போபண்ணா - எப்டன் ஜோடி...
ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி, தர வரிசையில் 24-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய், லின் யின்-ஹு ஜோடியை எதிர்த்து விளையாடியது. 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ட்ரீசா - காயத்ரி...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் நகரில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து கெபர்ஹாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க...
இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட்ஆட்டங்கள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய அணி எந்தவித பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்காமல் நேரடியாக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஆப்டஸ் மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக மேற்கு...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜாஸ் பட்லரின் அதிரடி காரணமாக இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிட்ஜ்டவுணில் நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவல் 43, ரோமரியோ ஷெப்பர்டு 22, நிக்கோலஸ்...
சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின்...
சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹரியானா 8-0 என்ற கோல் கணக்கில் மிசோரம் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் ரோஹித் 4 கோல்களையும் ரஜிந்தர் சிங், ஜோகிந்தர் சிங், பர்தீப் சிங், அமித் சாஹல் ஆகியோர் தலா ஒரு கோலையும்...
சென்னை: தெலங்கானா சர்வதேச சாலஞ்சர்ஸ் பாட்மிண்டன் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி, தெலங்கானாவைச் சேர்ந்த தருண் ரெட்டி கதத்தை எதிர்த்து விளையாடினார். இதில் ரித்விக் சஞ்சீவி 21-11, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இவர், ஹட்சன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
தேசிய சீனியர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி வெற்றி கண்டது. 14-வது ஆடவருக்கான தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி 9-0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல் அணியை வீழ்த்தியது. ஒடிசா அணியின் சார்பில் அஜய் குமார் எக்கா (15, 50-வது நிமிடங்கள்), கெரோபின் லக் (47,...
இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி பெர்த் நகரில் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி 2 குழுவாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13...