Google search engine
இந்திய கிரிக்​கெட் அணி ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணிகள் இடையிலான 5 போட்​டி கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​கு​கிறது. இந்நிலை​யில் ஆஸ்திரேலிய கிரிக்​கெட் அணியின் சுழற்​பந்து வீச்சாளரான நேதன் லயன் கூறிய​தாவது: அஸ்வின் சிறந்த பந்து வீச்​சாளர். அடிப்​படை​யில் அவருக்கு எதிராக நான் நேருக்கு நேராக என்னுடைய கிரிக்​கெட் வாழ்க்கையை முழு​வதும் விளையாடி உள்ளேன். அவரிடம் இருந்து...
கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் செய்த போது விராட் கோலி முதல் டெஸ்ட் அடிலெய்ட் பகலிரவு போட்டியில் 36 ரன்களில் ஆல் அவுட்டுக்குப் பிறகே விடுப்பில் சென்று விட கடினமான சூழ்நிலையில் அஜிங்க்ய ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது கேப்டன்சி ஆஸ்திரேலிய அணியினரையே பிரமிக்க வைத்தது. 1932-33 ஆண்டுகளில் டான் பிராட்மேன் என்னும் ஒரு மிகப்பெரிய ஆளுமை கிரிக்கெட் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்...
ரன் குவிக்க முடியாததால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய...
இந்தியன் ரேசிங் லீக் 2024 கார்ப்பந்தயத்தில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எப்4ஐசி) கார்ப்பந்தயம் 5 சுற்றுகளாக நடத்தப்பட்டது. பந்தயத்தின் இறுதிப்பகுதியாக கடைசி 2 சுற்றுகள் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார்ஸ் ஸ்பீடு பந்தய மைதானத்தில் நடைபெற்றன. இதில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணி அதிக புள்ளிகளைப்...
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்​டர்​-கவாஸ்கர் கோப்​பைக்கான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலி​யா​வில் நடைபெறவுள்​ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்​க​வுள்​ளது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தற்போது குழந்தை பிறந்​துள்ள​தால் அவர் ஆஸ்திரேலி​யா​வுக்​குச் செல்​ல​வில்லை. இதையடுத்து அடிலெய்​டில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்து கொள்​வார் எனத் தெரி​கிறது. கேப்டன் ரோஹித் சர்மா இல்லாத​தால், அணியின்...
சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 32, ஆரோன் ஹார்டி 28, கிளென் மேக்ஸ்வெல் 21, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 20 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை குவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் சீரான இடைவெளியில்...
ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில்உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. 31 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியில்நேற்று ஒடிசா - ஹரியானா அணிகள் மோதின.இதில் ஒடிசா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி சார்பில் லக்ரா ஷில்லானந்த் ஹாட்ரிக் கோல் (48, 57 மற்றும் 60-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார்....
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் சென்ற சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சங்கீதா குமாரி 32-வது நிமிடத்திலும், சலீமா 37-வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடித்தனர். 60-வது நிமிடத்தில்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெபர்காவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி...
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு பிசிசிஐ கடும் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தை ஐசிசி நிறுத்தி வைத்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 2025-ம் ஆண்டு பிரப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும்...