Google search engine
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி விமான நிலையத்தை வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். தூத்துக்குடிக்கு வரும் பிரதமரை, பாஜகவினர் 25 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்றும், தமிழகத்தில் பாஜக...
தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ்...
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது என்பதில் கூட்டணிகளுக்குள் மட்டுமல்லாது... கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குள்ளேயே நீயா நானா யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. 2026 சட்​டமன்​றத் தேர்​தலில் போட்​டி​யிட திட்​ட​மிடும் புதுச்​சேரி​யின் முக்​கிய அரசி​யல் கட்சி தலை​வர்​கள், தங்​களது தொகு​தி​களை தாங்​களே தேர்வு செய்​து, மக்​களுக்​கான நல உதவி​களை தாராள​மாக வாரி வழங்க ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள். தங்​களுக்கு தேர்​தலில்...
தமிழக வெற்​றிக் கழகத்​தில் 2 கோடி உறுப்​பினர்​கள் என்ற இலக்​குடன் உறுப்​பினர் சேர்க்​கும் பணி நடை​பெற்று வருகிறது. இதற்​காக ஏற்​கெனவே, இணை​யதளம் அறி​முகம் செய்​யப்​பட்​டிருந்த நிலை​யில், தற்​போது புதிய செயலி​யும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இதைத்தொடர்ந்​து, ஜூலை 20-ம் தேதி (நேற்​று) விஜய் தலை​மை​யில் மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் நடை​பெறும் என்​றும், அதில் உறுப்​பினர் சேர்க்கை செயலியை விஜய் அறி​முகம் செய்​வார் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த நிகழ்ச்​சிகள் திடீரென தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்​தில் குற்​றங்​களை தான் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை​யென்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். நயி​னார் நாகேந்​திரன்: மத்​திய அரசால் வெளி​யிடப்​பட்ட தூய்மை நகரங்​கள் பட்​டியலில் தேசிய அளவி​லான நகரங்​களின் தரவரிசை​யில் சென்னை 38-வது இடத்​தை​யும், மதுரை 40-வது இடத்​தை​யும் பெற்​றிருப்​பது மிகுந்த கவலை​யை​யும், அதிர்ச்​சி​யை​யும் அளிக்​கிறது. தமிழகத்​தின் ஒரு நகரம்...
தொழிற்​சங்க சொத்து விவ​காரத்​தில் வைகோ விவரம் தெரி​யாமல் பேசுகிறார். பஞ்​சாலை தொழிற்​சங்க சொத்​துகளை எந்​தக்​கட்​சி​யும் கட்​டுப்​படுத்த முடி​யாது என திருப்​பூர் சு.துரை​சாமி தெரிவித்துள்ளார். மதி​முக​வின் முன்​னாள் அவைத்​தலை​வ​ரான திருப்​பூர் சு.துரை​சாமி நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: வைகோவுக்கு நெருக்​கடி ஏற்​பட்ட காலத்​தில் அவருக்​குப் பக்​கபல​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக நான் திமுக​விலிருந்து வெளியே வந்​தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அபகரித்​துள்​ள​தாக வைகோ பேசி​யுள்​ளார். பஞ்​சாலைத் தொழிலா​ளர்​கள் சங்​கத்​துக்​கென்று...
ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என்று பழனி​சாமி பேசி​ய​தில், எந்த உள்​நோக்​க​மும் இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். நாகை மாவட்​டம் உத்​தம சோழபுரத்​தில் வெட்​டாற்​றின் குறுக்கே கட்​டப்​படும் தடுப்​பணைபணியை நிறுத்​தி​விட்​டு, ஏற்​கெனவே அறி​வித்த பூதங்​குடி பகு​தி​யில் தடுப்​பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்​பில் வாஞ்​சூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது:...
முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரையும், துணை முதல்வர் உதயநிதியையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மு.க.முத்துவின் மறைவு மிகவும் வருத்தம் அளித்தது....
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது திமுக தலைமை. இதற்கு, வயோதிகத்தைக் காரணமாகச் சொன்னாலும் இதனால் ஐ.பி ஆதரவு வட்டாரம் சற்று திகைத்தே நிற்கிறது. திமுக துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி தென் மாவட்ட திமுக-வில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக வென்றிருக்கும் இவர்,...
 திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பாஜகவினரும் பங்கேற்க...