நண்பரின் கிட்னி தானத்தை ஏற்று சிகிச்சை தர அனுமதி: நட்பை ஆவணப்படுத்த முடியாது என நீதிமன்றம் கருத்து
admin - 0
குடும்ப நண்பரின் கிட்னியை பெற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ள அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த வி.பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது குடும்ப நண்பரான ஈரோட்டை சேர்ந்த சி.கணேசன் என்பவர், தனது கிட்னியை தானம் அளிக்க முன்வந்துள்ளார்.
இதற்காக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையில் கணேசனும், பெரியசாமியும்...
இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழவைத்த சம்பவம்: திண்டிவனத்தில் 5 பேர் மீது வழக்கு
admin - 0
திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. திண்டிவனம் நத்தைமேடு பகுதி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதான சாராய வியாபாரி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர்.
இவரது மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்....
மேயர்கள் மாற்றத்துக்கு ஊழல் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலே காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு
admin - 0
ஊழல் பணத்தை பங்கிடுவதில் கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட மோதலால் கோவை, காஞ்சி, நெல்லை மாவட்ட மேயர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதுரையில் 3-வது நாளான நேற்று மேற்கு தொகுதியில் உள்ள பழங்காநத் ததில் பேசியதாவது:மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
அடுத்த...
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த ஆக.30-ம் தேதி முதல்வர் ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் சென்றனர். ஜெர்மனியில் அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அங்குள்ள தூதரக அதிகாரிகள், தமிழர் குடும்பத்தினர் முதல்வரை...
அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து 5-ம் தேதி (நாளை) மனம் திறந்து செய்தியாளர்களிடம் பேச உள்ளதாகக் கூறி கட்சியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், “நான் சசிகலாவை சந்திக்கவில்லை,”...
கோபியில் கட்சியினருடன் நேற்று ஆலோசனை நடத்திய அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவதாக அறிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அன்னூரில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் விழாவைப் புறக்கணித்தார்.
தொடர்ந்து, பழனிசாமியின் பெயரை...
மேஷம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்.
ரிஷபம்: மன இறுக்கம் நீங்கும். முகப் பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். வியாபாரத்தில்...
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட கட்சியின் புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணியின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாமக மற்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கட்சி வளர்ச்சிப் பணிகள், அன்புமணி செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, கட்சியின் புதிய உறுப்பினர் அடையாள அட்டை...
தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு
admin - 0
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை ஆசிரியை...
ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில், ஆசிரியர்களை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன. இதில், திருச்சி கே.கே. நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. இந்நிலையில், இப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்புகளை நேற்று தொடங்கி வைத்து, பள்ளியில்...










