நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செயல்படும் தனியார் பள்ளியில் நேபாளத்தை சேர்ந்த ஜனக் என்பவர் இரவு நேரக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் பகதூர் (25) பெங்களூருவில் உள்ள தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விடுமுறைக்காக கோத்தகிரிக்கு வந்த பகதூர் நேற்று முன்தினம் இரவு வளர்ப்பு நாயுடன் வெளியே சென்றார். சில மணி நேரங்கள் கழித்து நாய் மட்டும் வீடு திரும்பியது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்...
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும்: அன்புமணி, அண்ணாமலை, விஜய் வலியுறுத்தல்
admin - 0
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி, அண்ணாமலை, விஜய் ஆகியோர் வலியுறுத்திஉள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது, எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கியதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை...
கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புதுப்பிக்கப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் ஆகிய ‘என்.எஸ்.கே’ 1908-ம் ஆண்டு பிறந்தார். 1940, 1950-களில் தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடகத் தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்றெல்லாம் புகழுடன் விளங்கியவர்.
ஜி.என்.செட்டி சாலை - திருமலைப் பிள்ளை சாலை சந்திப்பில் அண்ணாவால் திறக்கப்பட்ட கலைவாணர்...
ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரும், மூத்த கல்வியாளருமான எஸ்.எஸ்.ராஜகோபாலன் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணாமாக, சென்னை, கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் காலமானார். ராஜகோபாலனின் விருப்பப்படி அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
முன்னதாக, அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்திய...
சூரியக் கட்சியில் இருக்கலாம், சூப்பர் ஹீரோ கட்சியுடன் பேசலாம் என கதர் கட்சிக்குள் இரண்டு ‘கட்சிகள்’ கச்சைகட்டி ஆடும் நிலையில், சத்தமில்லாமல் இன்னொரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறாராம் கதர் கட்சியின் ‘வெல்த்’ தலைவர்.
சூரியக் கட்சியால் சில பல சகாயங்களை பெற்றுவரும் அவருக்கு அத்தனையும் விட்டுவிட்டு அந்த முகாமை விட்டு மாற்று முகாம் நோக்கிச் செல்வதற்கு மனம் வரவில்லையாம். அதனால், முடிந்தவரைக்கும் சூரிய கட்சி கூட்டணியிலேயே நீடிப்பதற்கான அத்தனை வேலைகளையும்...
பத்மஸ்ரீ விருது பெற்ற குரும்பர் ஓவியர் கிருஷ்ணனின் மகள் வாசுகி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்
admin - 0
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்த கிரியை சேர்ந்த ஆலு குரும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இவரது மனைவி சுசீலா, மேட்டுப்பாளையத்தில் பாக்குத் தோப்பில் வேலை செய்து, குடும்பத்தை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்குப் பிறகு கல்விக் கட்டணம் செலுத்த வழியின்றி, படிப்பை நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி...
தமிழக, காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தியா ஜோசப் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் அமோஸ்டின், ஜெனிடாஸ், ஜெபஸ்டின் ஆகியோரைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வருவாய் 2024–25-ம் நிதியாண்டில், கட்டணம் தவிர்த்து இதர பிரிவுகளில் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான...
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் மீஞ்சூர் - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு பிப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு பிப். 5, 7,...
கொலை செய்யப்பட்ட பிஹார் குடும்பத்தினரின் உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் உத்தரவு
admin - 0
கொலை செய்யப்பட்ட பிஹார் தம்பதி மற்றும் குழந்தையின் உடல்களை கட்டணமின்றி சொந்த மாநிலத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வேலை தேடி சென்னை வந்த, பிஹார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார், மனைவி புனிதா குமாரி, அவர்களின் 2 வயது குழந்தை ஆகியோர் இங்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரால் கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து கொலையாளிகள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மூவரின்...
