திண்டிவனத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த வாரம் சந்தித்தார். இந்நிலையில், தைலாபுரத்துக்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று சென்று, பாமக நிறுவனர் ராமதாஸிடம், தனது குடும்பத்தில் நடைபெறும் திருமணத்துக்கான அழைப்பைக் கொடுத்தார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பாமக தரப்பில் கேட்டபோது, “தமிழகத்தின் அரசியல் கள நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில்...
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேற்று ஆறுதல் கூறினர். மேலும், சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை...
கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும்...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் காட்டத்தை கிளப்பி இருக்கும் நிலையில், திமுக-வை விட்டுவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகளை பழனிசாமி வம்புக்கிழுத்துப் பேசுவது ஏன் என்ற சர்ச்சையும் வெடித்திருக்கிறது.
அதிமுக - பாஜக உடன்படிக்கை ஏற்படுவதற்கு முன்பு திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளுக்கு, அந்தப் பக்கம் அணி மாறிவிடலாமா என்ற சபலமும் லேசுபாசாக இருந்தது....
கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்த மனு: கரூரில் 27.9.2025 அன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் அரசியல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட போதிலும், குழந்தைகள், பெண்கள்...
கரூரில் பாதிக்கப்பட்டோரை விஜய் சந்திக்காதது குறித்து கேள்விக்கு, “தம்பி போகலைன்னா என்ன? அண்ணன் நான் தான் சென்றேனே?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார்.
சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இப்போது எங்களுடன் மின் துறை அமைச்சர் வந்தார். அவர், மின்கம்பத்தில் தொண்டர்கள் ஏறும்போது தவெகவினர்தான் மின்சாரத்தை துண்டிக்குமாறு சத்தம் போட்டனர் என்றும், சிலர் ஜெனரேட்டரில் ஏறி விழுந்ததில் காலில் அடிப்பட்டது என்றும்...
கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 15 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று...
கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான கோர சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக...
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில்கூட கூட்டணிக்கு கட்சிகள் வரலாம். இப்போது இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கடம்பூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதன்முதலில் தேர்தல் களத்துக்கு...
திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் உட்பட 6 பேர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தி இருந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த 6 பேரில் சி.வி.சண்முகமும் ஒருவர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசிக்கும் சி.வி.சண்முகத்தை, பாஜக மாநிலத் தலைவர் நயினார்...





