கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவல்துறை பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், அரசின் அலட்சியத்தால் கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூரில் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் செருப்பு...
பேரிடர் மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில அரசின் நிதியில் நவீன ஆம்பிபியன் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.193.93 கோடி செலவில் மீட்பு படையினருக்கு வேண்டிய மீட்பு உபகரணங்கள், கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. பேரவை துணைத் தலைவரின் கோரிக்கையை பரிசீலித்து,...
கரூர் நெரிசல் தொடர்பாக பேரவையில் ஸ்டாலின் – இபிஎஸ் கடும் வாக்குவாதம்: அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா, முழக்கம்
admin - 0
சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கொண்டு வந்தனர். அப்போது உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் விவரம்:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம்...
தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நில அளவு உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக நிறுவுவது தொடர்பான சட்டத்திருத்த முன்வடிவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் நேற்று அறிமுகம் செய்தார். சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. மாணவர் நலனுக்காகவும், உயர்கல்வியை மேம்படுத்தவும், தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான...
கரூர் சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
admin - 0
கரூர் துயர சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்று பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினார்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கரை ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த வேண்டியிருந்தால்...
“பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது!” – மு.வீரபாண்டியன் நேர்காணல்
admin - 0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீங்கள் கட்சியை வளர்த்தெடுப்பதில் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
கொள்கை அளவில் மேலிடத்தில் இருந்து கட்டப்படும் கட்சி எங்கள் கட்சி. ஆனால், மேலிடத்திலிருந்து உத்தரவு வரும் என்று...
ஆலயக் கட்சியின் ’முதன்மை’ பொறுப்பில் இருக்கும் மாண்புமிகு தனது மாவட்டத்தில் யாருக்கெல்லாம் இந்த முறை சீட் என்பதைவிட யாருக்கெல்லம் சீட் தரக்கூடாது என்பதை தரமாக முடிவெடுத்து வைத்திருக்கிறாராம். ‘அரங்கத்து’ பார்ட்டிக்கும் அவருக்கும் சுத்தமாக ஒத்துப்போகவில்லை. முகத்துக்கு நேராக வணக்கம் வைத்து முகஸ்துதி பாடும் ‘அரங்கத்து’ பார்ட்டி பொது இடங்களில் ‘முதன்மை’யை முரட்டுத்தனமாகப் போட்டுத் தாக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
‘அரங்கத்து’ பார்ட்டிக்கு வலுவான சாதியப் பின்னணி இருப்பதால் அவரை சட்டையைப் பிடித்துக்...
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போட்டியிடும் தொகுதி என்பதால் எடப்பாடி இம்முறையும் தேர்தல் களத்தில் நட்சத்திர அந்தஸ்துக்கு தயாராகி வருகிறது. எடப்பாடி தொகுதிக்கும் பழனிசாமிக்குமான பந்தம் 1989-ல் இருந்தே தொடர்கிறது. இடையில் மூன்று தேர்தல்களைத் தவிர இப்போது வரைக்கும் எடப்பாடி அவர் கைக்குள் தான் இருக்கிறது. இந்த நிலையில், இம்முறை ‘வெல்வோம் 200’ என்று சொல்லிக் கிளம்பி இருக்கும் திமுக எடப்பாடியில் பழனிசாமியை எதிர்த்து யாரை நிறுத்தப் போகிறது...
‘மேற்கில் சூரியன் மறைந்தது மறைந்தது தான்!’ – அமைச்சர் மூர்த்திக்கு டஃப் கொடுக்கும் செல்லூர் ராஜு
admin - 0
கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் இம்முறை திமுக வெற்றிபெற வேண்டும். அதிலும் குறிப்பாக, மதுரை மேற்கு தொகுதியின் வெற்றி முக்கியமானது” என்று அமைச்சர் பி.மூர்த்தியிடம் அழுத்தமாகக் கூறிச் சென்றார். இதற்காகவே மாநகர திமுக செயலாளர் தளபதியின் ஆளுகைக்குள் இருந்த மேற்கு தொகுதியை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான பி.மூர்த்தியின் எல்லைக்கும் மாற்றினார்.
இதையடுத்து...
எல்லையை மாற்றியதால் தொல்லையில் ஆலங்குளம் திமுக! – எதிர்பார்த்துக் காத்திருப்பவரை ஏமாற்றிவிடுமா தொகுதி பிரிவினை?
admin - 0
தென்காசி தெற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் இருந்த ஆலங்குளம் தொகுதியை நெல்லை திமுக உட்கட்சி உரசல்கள் காரணமாக, அண்மையில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக எல்லைக்குள் மாற்றிவிட்டது திமுக தலைமை. இதனால், இம்முறை ஆலங்குளத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுகவின் கட்டுப்பாட்டில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகள்...










