மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கான இடங்களில் வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்குவதற்கு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மொத்த பயிற்சி இடங்களில், 20 சதவீதம் வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரதப்...
திருப்பரங்குன்றம் மேல் முறையீட்டு வழக்கில் முருகன் அருளால் வெற்றி கிடைத்துள்ளது என மனுதாரர் ராம.ரவிக்குமார் தெரிவித்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திந்த பிரதான மனுதாரர் ராம ரவிக்குமார் கூறுகையில், முருகன் அருளால் வெற்றி கிடைத்துள்ளது.
இந்த வெற்றியை ராஜகோபாலன் தொடங்கி பூர்ணச்சந்திரன் உள்ளிட்டோருக்கு சமர்ப்பிக்கிறோம். இந்துக்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை. மக்களின் மத உணர்வுக்கு எதிராக தமிழக அரசு நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் 2 இடங்களில் தீபம் ஏற்றுவது...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது.இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு 170 பக்கங்கள் கொண்டது.
தீர்ப்பின் தொடக்கத்தில் பைபிள் வசனத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர். முடிவில் வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைத்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நீதிபதிகள் நன்றி தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்: ‘கடவுள், ஒளி உண்டாக கடவது என்றார்,...
குன்னூர் வந்த நீலகிரி மலை ரயிலின் இன்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை நீலகிரி மலை ரயில் குன்னூர் நோக்கி வந்தது.
குன்னூர் அருகே வந்தபோது திடீரென ரயில் இன்ஜினில் தீப்பிடித்து, புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால், உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர் கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சுற்றுலா...
அதிகாரக் கட்சியில் இருக்கும் பெண் வாரிசு சென்னைக்குள் இருக்க வேண்டாம் என்பதால் தான் அவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். அதற்காக அவர் எந்தச் சூழலிலும் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக டெல்லியை மையப்படுத்தியும், தெற்கத்திச் சீமையை மையப்படுத்தியும் பிரதானப் பொறுப்புகளையும் அவருக்கு வழங்கினார்கள். ஆனபோதும், பெண் வாரிசு திருப்தியாக இல்லை என்கிறார்கள்.
“எத்தனை காலம் தான் இப்படி டெல்லிக்கும் சென்னைக்குமாக ஓடிக்கொண்டிருப்பது?” என நெருக்கமான வட்டத்தில் ஆதங்கப்பட்டு வரும் அவர், பேசாமல், கேந்திர...
ஜம்மு - காஷ்மீரை மத்திய பாஜக அரசு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது, அதை ஏற்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். தற்போது அகில இந்திய காங்கிரஸ் வார் ரூம் தலைவராகவும், திருவள்ளூர் தொகுதி எம்பி-யாகவும் இருக்கும் அவரிடம் 'ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
Q
2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகும் அக்கட்சியில் சேர என்ன காரணம்?
A
பாஜக-வை எதிர்ப்பதற்கோ பாசிச கொள்கையை அழிப்பதற்கோ இருக்கும்...
முதல்வரின் திட்டங்களால் அனைவரும் பயன்பெறுவதை பழனிசாமியால் பொறுக்க முடியவில்லை: அமைச்சர் விமர்சனம்
admin - 0
மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என அனைவரும் முதல்வரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பழனிசாமி ஆட்சியில் 2019-ம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு தொடர்ந்து வழங்கி வந்ததாக பொய் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் ரூ.68 கோடியில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை...
மதுபான பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீலகிரியில் முதலில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. தற்போது 21 மாவட்டங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று (6-ம் தேதி) முதல் இந்த திட்டம் அமலாக உள்ளது. இந்த திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10...
போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் வேண்டும்: ஏஐடியுசி, சிஐடியு வலியுறுத்தல்
admin - 0
‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும்’ என ஏஐடியுசி மற்றும் சிஐடியு வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் 2003 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் பொருந்தும் என அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்குப் பொருந்தாத ஒரு திட்டம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.
ஊதிய ஒப்பந்தங்களின்படி உருவான ஓய்வூதியத் திட்டத்தை அரசாணை...
மின்சார ரயில் இயக்கம் மற்றும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து மதியம் 1...
