போலி தூதரக சான்றிதழ் சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது. அதில் எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒரு பகுதியாக, மாணவர்களின்...
லாரியில் ரகசிய அறை அமைத்து, ஆந்திராவில் இருந்து பேராவூரணிக்கு 330 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தனிப்படை போலீஸார் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு பகுதியை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், டீசல் டேங்க் அருகில் ரகசிய அறை அமைத்து, 330 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பின்தொடர்ந்து...
உலகளவில் போற்றப்படக்கூடிய கர்னாடக இசை நம்முடைய அடையாளமாக இருப்பது நமக்குப் பெருமையாகும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவனின் வருடாந்திர மார்கழி இசைத் திருவிழா-2024 தொடக்க நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவைத் தொடங்கி வைத்து ‘கதா கலாஷேபம்’ எனும் நூலை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: மார்கழி மாதம் இசைக்கும், ஆன்மிகத்துக்கும்...
கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவின் தேர்தல் அறிக்கையில் “பணியில் இருந்தபோது கரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால்,...
அடுத்த 2025-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமைகளுடன் 24 நாட்கள் அரசு விடுமுறை தினங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள் தவிர, இதர பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படும்.
அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து...
வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்: மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
admin - 0
மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கி தருவதாக சொல்வதை கேட்டு யாரும் ஏமாற வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னை - சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ‘ஊட்டச்சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கவுன்சிலர்கள் த.மோகன்குமார், சுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது,...
தமிழ்ப் பல்கலை.யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசாரணை குழு: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
admin - 0
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 13-வது துணைவேந்தராக வி.திருவள்ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக்காலம் டிச. 12-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநரால் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பாஸ்கரன் இருந்தபோது, பேராசிரியர்,...
மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 9,269 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8,355 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 107.91 அடியில் இருந்து 108.32 அடியாகவும், நீர் இருப்பு 75.47 டிஎம்சியில் இருந்து 76.04 டிஎம்சியாகவும் உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 19-ம்...
கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் ஆவேசம்
admin - 0
இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறையாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பொன்.மாணிக்கவேல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. கோயில் கணக்குகளை தணிக்கை...
ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து
admin - 0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, டிடிவி.தினகரன் என ஆயிரம் குடும்பங்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாக வந்தவர்கள்தான் சசிகலா, டிடிவி.தினகரன் உள்ளிட்டோர். ஆனால், அவர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள்...










