Google search engine
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக பொதுச்செயலாளர் கே.ஜெய்சங்கர் எழுதிய கடிதம்: ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பிபிஜி சங்கர் ஆகியோரது கொலை தொடர்பான வழக்குகள், செல்வப்பெருந்தகை மீது உள்ளன.ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்துறைகளை கட்டுப்படுத்தும் ஒருவன்முறை கும்பலின் தலைவர்தான் வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரன். அவருடைய மகன், இளைஞர் காங்கிரஸில் பொதுச்செயலாளராக இருந்த அஸ்வத்தாமன். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இளைஞர் காங்கிரஸில்...
மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனத்தில் உள் ஒதுக்கீடு அளிக்கவும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 30 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், அந்த காலியிடங்களில் ஐடிஐ படித்தவர்களையும் ஐடிஐஅப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களையும் பணிநியமனம் செய்யக்கோரி தமிழ்நாடு ஐடிஐ படித்த வேலைவேண்டுவோர் ஐக்கிய சங்கம் சார்பில் அண்ணாசாலையில்...
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது சிறுமியிடம் போலீஸார் பெற்ற வாக்குமூலம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும்சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக பணிபுரிந்த மருத்துவர் சுப்பையாவுக்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் சுப்பையா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில்ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மருத்துவர்சுப்பையாவுக்கு எதிராக இதுபோலபல புகார்கள்...
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவராக விஜய் அமிர்தராஜ் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணைதலைவராக கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நுங்கம்பாக்கம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள டென்னிஸ் மைதானஅரங்கில் கடந்த 16-ம் தேதிநடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின்தலைவராக முன்னாள் வீரர் விஜய் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக ஏ.வெள்ளையன், கார்த்திப.சிதம்பரம் எம்.பி., ஹரேஷ் ராமசந்திரன், விஜய்...
மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் நிலை உருவாகலாம்என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அம்பேத்கர், பெரியாரை போற்றுவதைப்போல, திருவிக,மறைமலை அடிகள், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், முத்துராமலிங்கத் தேவர், வேலு நாச்சியார், அழகுமுத்துக்கோன் போன்றவர்களையும் நடிகர் விஜய் போற்ற வேண்டும். அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்று என்னை கேட்பதைவிட, சீமானுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று அவரிடம்...
சென்னையில் மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம்விட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 நவ.1, 7, டிச. 1 மற்றும் 2019 ஜன. 3, செப். 26, 2020 பிப்....
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், குடியிருப்போர் நலச்சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த பயிற்சி அளிக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. டிசம்பர் வரையிலான இந்த மழைக்காலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் அதிகளவில் மழையை பெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிகளவில் தண்ணீர்தேங்கி ஆண்டுதோறும் சிக்கலை...
நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார். சென்னை துறைமுகம் சார்பில், ‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் சக்தியை பயன்படுத்துதல்’ என்றநிகழ்ச்சியும் பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தூய்மைப்பணி தொடக்க விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர்சுனில் பாலிவால் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு இன்று...
வெள்ளி விழா, பொன் விழா,பவள விழாவின்போது ஆட்சியில் இருப்பதுபோல, நூற்றாண்டு விழாவின் போதும் திமுக ஆட்சியில் இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் நேற்று நடந்த திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் முதல்வர் பேசியதாவது: தொண்டர்களின் வியர்வை, மூச்சுக் காற்றால்தான் திமுக கம்பீரமாக, தலை நிமிர்ந்து நிற்கிறது. நீங்கள் இல்லாமல் திமுக இல்லை; நானும் இல்லை. கடந்த 1967-ம் ஆண்டு எனது 13 வயதில்...