Google search engine
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 213 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழகத்தில் தீபாவளியை ஒட்டி பட்டாசு வெடிப்பதில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. காலையும், மாலையும் 2 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், பொதுமக்கள் அக்.30-ம் தேதி அன்று இரவு முதலே தெருக்களில் பட்டாசுகளை வெடித்தனர். அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் வெடித்து சிதறிய பட்டாசுகளின் குப்பைக் கழிவுகள் வீதிகளில் குவிந்து...
தாம்பரம் மாநகராட்சியில் தீபாவளியையொட்டி மட்டும் 29 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக தாம்பரம் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளியையொட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி தினத்தில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சென்னையில் பல இடங்களில் யாரும்...
 தமிழகத்தில் தினசரி மின்தேவை16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில்உள்ளது. இது குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகாவாட் ஆகவும், கோடை காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் ஆகவும் இருக்கும். கோடை காலத்தில், இந்த ஆண்டுமே 2-ம் தேதி மின்தேவை 20,830மெகாவாட் ஆக அதிகரித்தது.இதுவே உச்சபட்ச அளவாகும். தமிழகத்தில் அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், செப்டம்பர் மாதத்திலேயே பல மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால், அந்த மாதம் மின்நுகர்வு வழக்கத்தைவிட குறையும். ஆனால்,...
தெற்கு ரயில்வேயில் 24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன. இதற்கிடையில்,...
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள் ளதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து டிடிவி.தினகரன் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: பத்திரப் பதிவுத் துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு, ஏழை மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும். எனவே, முத்திரைத் தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகைபத்திரம், கிரயம்,...
தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காச...
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2-ல் கீழ்க்கட்டளைக்கு அருகே உள்ள பிருந்தாவன் நகர், பாலாஜி அவென்யூ, கேஜிகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான தெருக்கள் தாழ்வானதாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும்நிலை உள்ளது. இதுதவிர மூவரசன்பேட்டை ஏரி நிரம்பிவிட்டால் அதன் உபரிநீரும் இந்த தெருக்களில் புகுந்துவிடுவதால் பருவமழையின்போது இப்பகுதி வெள்ளக்காடாக மாறிவிடும். எனவே, மழைநீர் வடிகால் அமைத்து தரவேண்டுமென...
சென்னை மாநகரில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினமும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாநகருக்கு வந்து செல்கின்றனர். மாநகரமக்கள் தொகைக்கு ஏற்றவாறு போதிய கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகம் அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. மாநகரில் தற்போதைய நிலவரப்படி 550-க்கும் மேற்பட்ட இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் பழைய கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. தூய்மை இந்தியா இயக்க நிதியில் 445 இடங்களில் நவீன கழிப்பிடங்களை இளஞ்சிவப்பு...
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்க பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நீர் நிலைகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சரியான திட்டங்களுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில், நிலத்தடி நீர் ஆதாரமாக 15-க்கும் மேற்பட்ட குளங்கள் அமைந்துள்ளன....
ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க, இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது. தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் பெற்ற நகரமாக ஈரோடு விளங்குகிறது. இங்கு வாரம் தோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தையில், குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்...