Google search engine
தொழில்முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான சாட்ஜிபிடி பயிற்சி வகுப்பு சென்னையில் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவுநர்களுக்கான ஒருநாள் சாட்ஜிபிடி பயிற்சி, சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 19-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. சாட்ஜிபிடி மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளைக் குறைக்கவும், திறன்களை மேம்படுத்தவும்...
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை மற்றும் இதர துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஆங்காங்கே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் புகார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் மிகப்பெரும் தாக்கத்தை...
அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள உரிமையியல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க...
அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை காக்க சென்னையில் வேல்யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ்.யுவராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையை காக்க வேண்டும்...
கல்லூரி மாணவர்களை செஞ்சிலுவை சங்கத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கூறினார். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை தமிழக ஆளுநரும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவருமான ஆர்.என்.ரவி திறந்துவைத்து பேசியதாவது: மனித சமூகத்துக்கு சேவை செய்வது என்பதுதான் செஞ்சிலுவை சங்கத்தின்...
தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு போதுமான வரவேற்பு இல்லை என்கின்றன விஜய்க்கு எதிரான கட்சிகள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து பிரசாந்த் கிஷோரை கூட்டிவைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய். பொதுவாக புதிதாக தொடங்​கப்​படும் கட்சிகளில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், நடிகர்கள் தாமாக வந்து இணைவது வழக்கம். விஜயகாந்த் கட்சி தொடங்​கியபோது...
“பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராய் இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” - அண்மையில் திமுக-வில் இருந்து விலகிய சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழில் அரசன் விலகலுக்காக சொன்ன காரணம் இது. இது உதாரணம் தான். தமிழகம் முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் இதுபோல எழில் அரசன்கள் நூற்றுக் கணக்​கில்,...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாரங்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ரயில் மூலம் இன்று (பிப்.12) காலை சென்னை வருகிறார். அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் அவர் காலை 8.05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று (பிப்.11) பிற்பகல் 2.45 மணிக்கு, விமானம்...
தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள்...
தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வசூலாகி, புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.10-ம் தேதி திங்கள்கிழமை அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அதை ஏற்று பிப்.10-ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில்...