Google search engine
‘சென்னை​யில் பிறந்த உங்கள் மனைவி சவுமியா தருமபுரி​யில் போட்​டி​யிடலாம், சென்னை​யில் வசித்த நான் மயிலாடு​துறை​யில் போட்​டி​யிடக் கூடா​தா?’ என்று அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடு​துறை காங்​கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கும்​பகோணத்​தில் 23-ம் தேதி நடைபெற்ற கூட்​டத்​தில் அன்புமணி ராமதாஸ் பேசும்​போது, ‘இந்த தொகு​திக்கு சம்பந்​தமில்லாத சென்னையி​லிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார். தெரி​யாமல் வாக்​களித்து அவரை வெற்றி பெறச் செய்​தீர்கள்'...
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுபோன்ற திட்டங்களால் வளமான, நலமான தமிழகம் உருவாகும் என்று உறுதிபட தெரிவித்தார். தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக...
ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம் அடைந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலை - கோபாலபுரம் சந்திப்பில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்ற கார் ஒன்று அதே பகுதியில் `யு' வளைவில் நேற்று காலை திரும்பியபோது, முன்னால் சென்ற ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ஆட்டோ சாலையில்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப்...
ஜெயலலிதாவுடன் நடிக்கும் திட்டம் இருந்தது என அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் மரியாதை செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா, அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்று, ஜெயலலிதா...
வன உரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்​தில் செயல்​படுத்து​வ​தால், மலைவாழ் மக்கள் பட்டா பெற முடி​யாமல் தவிப்​பதாக மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்​றம்​ சாட்​டி​யுள்​ளது. நில உரிமை​யும், பழங்​குடி மக்களின் இனச்​சான்று, இடஒதுக்​கீடு அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பும் கோரி சென்னை​யில் நேற்று தமிழ்​நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்​பில் ஆர்ப்​பாட்டம் நடைபெற்​றது. ஆர்ப்​பாட்​டத்தை தொடங்கி வைத்து மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாநில செயலாளர் பி.சண்​முகம் பேசி​ய​தாவது: ஆதிதிரா​விடர், பழங்​குடி​யினர் நல...
‘துரோகியின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம்’ என்று ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, காமராஜர் சாலை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் நொச்சிகுப்பம் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழாவில் நேற்று பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா உள்ளிட்டோர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை...
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே கோஷ்டி மோதலில் 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூரைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை (38), உப்புவாணிமுத்தூரைச் சேர்ந்த சிவனுபாண்டி ஆகிய இருவரது குடும்பத்தினருக்கு இடையே, அங்குள்ள சுடலைமாடன் சுவாமி கோயிலில் சாமி ஆடுவது தொடர்பாக, 2008-ம் ஆண்டில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், 2009-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி...
நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல்...