தமிழக சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல், போதைப் பொருள் உட்பட பல்வேறு வகையான குற்றச்செயல்களை முற்றிலும் தடுக்க டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக மண்டல ஐஜிக்கள், மாநகர் - பெருநகர் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு அவ்வப்போது தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்....
ஆதிக்கத்தை எதிர்ப்பதும் தாய்மொழியைக் காப்பதும் திமுகவினரின் ரத்தத்தில் ஊறிய உணர்வு: முதல்வர் ஸ்டாலின்
admin - 0
‘இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம், இன்னொரு மொழிப்போருக்கு தயாராக உள்ளோம்’ என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,.
இதுகுறித்து கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியை நம் மீது திணித்துக் கொண்டே இருக்கின்றனர். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை போராட்டம் தொடரும். அப்போதும் இப்போதும் நம்மை எதிர்க்கும் ஒரு சிறு ‘விபீடணக்’ கூட்டத்தை எதிர்கொண்டுதான் வருகிறோம். அந்த விஷமக் கூட்டம் நம்மை நோக்கி...
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் நேற்று நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி. இதன் கொள்கையை ஏற்று வருபவர்கள், பின்னர் முரண்பாடு காரணமாக வெளியேறுகிறார்கள். இது கட்சி பிரச்சினை. இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தமிழகத்தில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்....
மத்திய அரசின் நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கான பாடத் திட்டத்தை வகுக்காமல் இருப்பதும், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கல்வியே சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்...
செல்வப்பெருந்தகைக்கு வேண்டியவர்களை ஜெயிக்க வைக்க முயற்சி..! – இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெடிக்கும் சர்ச்சைகள்
admin - 0
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றுங்கள் என மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டெல்லிக்கு படையெடுத்துச் சென்று மனு கொடுத்துவிட்டு வந்திருக்கும் நிலையில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலிலும் செல்வப்பெருந்தகை தரப்பினர் புகுந்து விளையாடுவதாக புகார் வெடித்திருக்கிறது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஜனவரி 18-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 27-ம் தேதி வரை நடக்கிறது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்தலில் மாநில தலைவர், பொதுச் செயலாளர்,...
பெரியார், விஜய், திமுக, காங்கிரஸ் என சீமான் எல்லா பக்கமும் வம்பு வளர்க்கிறார். இதனால் அவரது கட்சியிலிருந்து பலரும் விலகிக் கொண்டே இருக்கிறார்கள். இது அவரின் அரசியலுக்கு பின்னடைவாக முடியும் என ஒரு தரப்பு விமர்சிக்கிறது.
ஆனால், இதுதான் சரியான தமிழ்த் தேசிய பாதை, சரியாகவே சீமான் பயணிக்கிறார் என்கிறது நாம் தமிழர் தரப்பு. வாக்கு வங்கி அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ந்துவந்த சீமானுக்கு, நடிகர் விஜய் ‘திராவிடம் -...
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் பிப். 26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக...
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு
admin - 0
தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டனர். இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்...
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டம் – முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
admin - 0
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்புவிடுத்து 40 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி வேளாண் பட்ஜெட் மற்றும் துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற உள்ளது. இதற்கு சட்டப்பேரவை...
பல ஏக்கர் நிலங்களை பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் சூழல்: விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை
admin - 0
பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக் குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் பரந்தூர் வட்டார விவசாயிகள் நிலவுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்று விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசியது: தமிழக அரசு 2021-ம் ஆண்டு அளித்த வாக்குறுதிப்படி பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் விவசாயிகளின் கருத்துகளை கேட்கவில்லை.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க...










