கொளத்தூரில் 4 மாதங்களை நிறைவு செய்த முதல்வர் படைப்பகம்: ரூ.60 லட்சத்தில் வாகன நிறுத்தம், உணவு அருந்துமிடம்
admin - 0
முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 4 மாதங்களை நிறைவு பெற்றுள்ள நிலையில், அங்கு ரூ.60 லட்சத்தில் வாகன நிறுத்தம் மற்றும் உணவு அருந்துமிடம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொழிற்கல்வி பெற்றவர்கள் புத்தொழில் நிறுவனங்களை தொடங்க, உட்கட்டமைப்பு மற்றும் அதன் பராமரிப்புக்காக பெருந்தொகையை செலவிட வேண்டியுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தயாராக விலை...
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை அடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், அத்திரையரங்கில் நேற்று சோதனையிட்டனர்.
அப்போது திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது: இந்த காலாவதியான குளிர்பானங்கள், பாப்கார்ன்கள் கேரளாவில் இருந்து விநியோகம்...
திமுக அரசின் திட்டங்களை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்: உதயநிதி அறிவுறுத்தல்
admin - 0
திமுக செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்களை அடுத்த ஓராண்டில், ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை முகாம் அலுவலகத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியின் திருமணத்தை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தொடர்ந்து மணவிழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இன்னும் ஒரு ஆண்டில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது....
ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு தீவிர நடவடிக்கை: கூடுதல் போலீஸார் நியமனம், கண்காணிப்பு கேமரா அமைக்க பரிந்து
admin - 0
ரயில்கள், ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் காவலர்கள் நியமனம், சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தமிழக ரயில்வே காவல் துறை திட்டமிட்டுள்ளது.
கோவை - திருப்பதி விரைவு ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கீழே தள்ளிவிட்ட சம்பவம், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து, ரயில்களில் பெண்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் கடந்த பல ஆண்டுகளாகவே பொதுவெளியில் வருவதில்லை. சமீபத்தில் தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்குச்...
சென்னை புறநகர் பகுதிகளில் 72 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அதில் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க விரும்புவோர் மார்ச் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான புதிய வழித்தடங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் கண்டறிந்துள்ளன.
அதன்படி சென்னை வடகிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 புதிய வழித்தடங்கள், சென்னை...
சென்னை: இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் பாஜக இல்லை என்றும் அவர் கூறினார்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திமுக மகளிர் அணி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி...
சென்னை வானிலை ஆய்வு மைய இணையதள சேவையை தமிழில் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று ஓய்வு பெற்றார். புதிய தலைவராக பி.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பிறந்த எஸ்.பாலசந்திரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்று, பி.எச்.டியும் முடித்தார். தொடக்கத்தில் மத்திய நீர்வள ஆதாரத்துறையில் ஆராய்ச்சி உதவியாளராக...
பெரிய நிறுவன மருந்தகங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகள் தயக்கம்: மருந்து வணிகர்கள் குற்றச்சாட்டு
admin - 0
பெரிய நிறுவன மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்த தயக்கம் காட்டுகின்றனர் என்று மருந்து வணிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 42,000 சில்லறை மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்கள் உள்ளன.
மருத்துவர் பரிந்துரையின்றி கருத்தடை மற்றும் தூக்க மாத்திரை வழங்குதல், வாங்கிய மாத்திரைகளுக்கு உரிய ரசீது தராதது மற்றும் ஆவணங்கள் பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,...
சிலை கடத்தல் வழக்குகளின் கோப்புகள் மாயமானது குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்
admin - 0
சிலை கடத்தல் வழக்குகளின் கோப்புகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒரு வாரத்துக்குள் நியமித்து வரும் ஏப்ரல் முதல் வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை...









