Google search engine
தமிழகக் கடலோரப் பகு​தி​களில் நில அதிர்​வு​கள் ஏற்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ள​தாக இந்​திய புவி​யியல் ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார் தெரி​வித்​தார். இந்​திய புவி​யியல் ஆய்வு மையத்​தின் 175-வது நிறுவன தின​விழா சென்னை கிண்​டி​யில் உள்ள மண்டல அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆய்வு மையத்​தின் இயக்​குநர் விஜயகு​மார், முன்​னாள் இயக்​குநர் ஏ.சுந்​தரமூர்த்தி உட்பட பல்​வேறு அலு​வலர்​கள், துறை​சார் நிபுணர்​கள் கலந்​து​கொண்டு தங்​கள் கருத்​துகளை பகிர்ந்து கொண்​டனர். 175-வது ஆண்டை...
தயா பொறியியல் கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சராக பதவி வகித்த மு.க.அழகிரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரியை...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க.அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து தாயாரின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள்(92). வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு...
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வு, விருப்பு ஓய்வு, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265.44 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த அரசு,...
மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தையொட்டி, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் என தென்மண்டல தலைமையக ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, வரும் 7-ம் தேதி ‘சிஐஎஸ்எஃப் தினம்’ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு...
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த திரவ நிலை வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை இமெயில் வந்தது. வெளிநாட்டிலிருந்து வந்த இந்த மிரட்டல் குறித்து உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகம் மற்றும் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து,...
தென்மாவட்டத்தில் இருந்து வரும் அரசுப் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக துறை சார்பில் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம், தாம்பரம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன. அவற்றில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாதவரம் செல்லும் பேருந்துகள் நீங்கலாக மற்ற பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை...
வைகுண்டரின் 193-ம் பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வைகுண்டர் விரும்பிய ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆதிக்க நெறிகளுக்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய வைகுண்டரின் 193-ம் பிறந்தநாள். “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என்...
நடப்பாண்டில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 25 மினி ஸ்டேடியங்கள் அமைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கும் வகையில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர்...
மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜக, தமாகா தவிர்த்து அதிமுக, பாமக, தவெக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில்,...