கர்னாடக இசை கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: முன்னாள் தேர்தல் ஆணையர் புகழாரம்
admin - 0
பிரபல கர்னாடக இசை மேதை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதை, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல இசை மேதையும் மிருதங்க கலைஞருமான ‘பத்மபூஷண்’ டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கர்னாடக இசைத் துறையில் அவரது பங்களிப்புக்காக இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள்...
மரபுவழி, நவீன பாணி ஓவிய, சிற்ப கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு ‘கலைச் செம்மல்’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபுவழி மற்றும் நவீன பாணியில் திறமைமிக்க ஓவிய, சிற்பக் கலைஞர்கள் 6 பேருக்கு தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் ‘கலைச்செம்மல்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன், செப்பு பட்டயம், ரூ.1 லட்சம் விருது தொகை, பாராட்டு சான்றிதழ் ஆகியவையும்...
தமிழர் முன்னேற்றக் கழகத்தினர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில், அக்கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியில் 2009 முதல் 2011 ஜனவரி மாதம் வரை சென்னை மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த க.அதியமான், அப்போது ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக வெளியே தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வந்தார். தமிழினம் சார்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்த தமிழர் முன்னேற்றக் கழகம்...
தமிழக ஐபிஎஸ் அதிகாரியான சுதாகர், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் பிரிவின் கூடுதல் ஆணையராக பணியிலிருப்பவர் ஆர்.சுதாகர் . இவர், மத்திய அரசு பணிக்கு செல்ல அண்மையில் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இதை தமிழக அரசு ஏற்று சிபாரிசு செய்தது. இந்நிலையில், சுதாகரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஜெனரலாக...
ஹோலி பண்டிகை முன்னிட்டு சொந்த நகரங்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து மார்ச் 8, 12 (சனிக்கிழமை, புதன்) ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு (வாரம் இருமுறை சிறப்பு ரயில்-06077) புறப்பட்டு, 3-வது நாள் (முறையே திங்கள், வெள்ளிக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம்...
கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதையில் ஆய்வு: வைகை, பல்லவன் உள்பட 20 விரைவு ரயில் சேவை மாற்றம்
admin - 0
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதையில் ஆய்வு நடைபெற உள்ள நிலையில், வைகை, பல்லவன், செந்தூர் விரைவு ரயில் உள்பட 20 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16116), செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே...
போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை பட்ஜெட் கூட்டத்தில் பேசி முடிவு காண தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்
admin - 0
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பேசி முடிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் சென்னை பல்லவன்...
ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் சார்பில், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர்) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆஸ்திரேலிய துணைத் தூதரகம், கிளீன்அப் ஆஸ்திரேலியா இயக்கம் மற்றும் அர்பேசர் சுமீத் இணைந்து சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் சென்னைக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் சிலாய் சாக்கி ஆகியோர் பங்கேற்று, கடற்கரை...
திப்பு சுல்தானின் வாரிசு என மக்களை நம்பவைத்து ரூ.5.5 கோடி சுருட்டிய தெலங்கானா மருத்துவரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் சுல்தான் ராஜு. இவர் தன்னை அனைவரிடமும் திப்பு சுல்தானின் வாரிசு என கூறிக்கொள்வார். எம்பிபிஎஸ் படித்து மருத்துவரான இவர் தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், ஜனகாமாவில் கே.கே ஹாஸ்பிடல்ஸ் எனும் பெயரில் ஒரு மருத்துவமனையை நடத்தி வந்தார். அங்கும்...
தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றின் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் வரும் 8-ம் தேதி...










