Google search engine
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,...
மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி அரசு என்று கூறவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஏப்.10-ம் தேதி...
பொதுமக்களின் வசதிக்காக பெயர் திருத்தம், பெயர் மாற்றத்துக்கான இணையவழி சேவை வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும். தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: பொதுமக்களிடம் இருந்து அரசிதழில் பெயர்...
தரமான கல்​வி​யால் நாம் நாட்டை வழி நடத்தி கொண்​டிருக்​கிறோம் என்று துணைவேந்​தர்​கள், பதி​வாளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டாலின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று மாலை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில், பல்​கலைக்​கழக துணைவேந்​தர்​கள், பதி​வாளர்​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில், அமைச்​சர்​கள், எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், எஸ்​.ரகுப​தி, மு.பெ.​சாமி​நாதன், அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், மா.சுப்​பிரமணி​யன், கோவி.செழியன், தலைமை செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், உயர்​கல்​வித்​துறை செயலர் சி.சமயமூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இக்​கூட்​டத்​தில் தொடக்​கத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின்...
காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 150 குடும்​பங்​களுக்கு வக்பு வாரி​யம் வரி கேட்டு நோட்​டீஸ் அனுப்​பிய விவ​காரம் தொடர்​பாக, வரு​வாய் கோட்​டாட்​சி​யர் விசா​ரணை நடத்தி வரு​கிறார். வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு ஒன்​றி​யம் இறைவன்​காடு ஊராட்​சிக்கு உட்​பட்ட காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 500 குடும்​பத்​தினர் வசித்து வரு​கின்​றனர். இவர்​களில் 150 குடும்​பத்​தினர் வசிக்​கும் வீடு​கள் வக்பு வாரி​யத்​துக்கு சொந்​த​மானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரி​யம் நோட்​டீஸ் அனுப்​பிய​தாகப் புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக அப்​பகு​தி​யினர்...
இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து அதிமுக சார்பில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக...
இருட்​டுக்​கடையை வரதட்​சணை​யாக கணவர் வீட்​டார் கேட்​கின்​றனர் என்று புது​மணப் பெண் போலீ​ஸில் புகார் தெரி​வித்​துள்​ளார். நெல்லை டவுனில் ‘இருட்​டுக்​கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்​திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்​ப​தி​யின் மகள் ஸ்ரீகனிஷ்​கா. இவர், வரதட்​சணை கேட்டு கணவர் வீட்​டார் கொலை மிரட்​டல் விடுப்​ப​தாக நெல்லை காவல் ஆணை​யரிடம் புகார் மனு அளித்​திருந்​தார். இதுகுறித்து கவிதா ஹரிசிங் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: எனது மகள் ஸ்ரீகனிஷ்கா​வுக்​கும்,...
சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று காலை திடீரென பலத்த காற்​றுடன் பரவலாக கனமழை பெய்​தது. இதனால் வெப்​பம் சற்று தணிந்​தது. தமிழகத்​தில் பிப்​ர​வரி மாதம் முதலே வெப்​பம் வாட்​டத் தொடங்​கியது. அவ்​வப்​போது வெப்​பநிலை உயர்ந்​தும் காணப்​பட்​டது. கடந்த 12-ம் தேதி சென்னை நுங்​கம்​பாக்​கம், மீனம்​பாக்​கம் உள்​ளிட்ட 9 நகரங்​களில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட்​டுக்கு மேல் வெப்​பம் பதி​வாகி இருந்​தது. இந்​நிலை​யில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் நேற்று காலை முதல்...
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகளிடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், நேற்று 2-வது...
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும்,...