நான்கு வழி மேம்பால சாலை பணி காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்: மே 4 வரை நீட்டிப்பு
admin - 0
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான அண்ணா சாலை பகுதியில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து மாற்றம் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழி மேம்பால கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, பணி நடைபெறும் இடங்களில் கடந்த 20 முதல் 22-ம் தேதிவரை வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதாவது, தேனாம்பேட்டையிலிருந்து...
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம், ரயில், பேருந்து நிலையகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், உலக தலைவர்களும்...
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது:
காஷ்மீரில், ‘மினி ஸ்விட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் ‘பெஹல்காம்’ என்ற மலைபாங்கான பள்ளத்தாக்கு,...
பணியின்போது மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உறுதி
admin - 0
கிராம உதவியாளர்கள் பணியின்போது மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மாரிமுத்து எம்எல்ஏ, "வருவாய் துறையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டு வரப்படுவார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் அளித்த பதில்: பணி நியமனம் செய்யும்போதே சிறப்பு காலமுறை...
திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் மொத்தமாக ரூ.5.88 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசியதாவது: மாநில அரசின் வரிவருவாயில் வணிகவரித் துறை மூலமாக 71.6 சதவீதமும், பதிவுத்துறை மூலமாக 15.4 சதவீதமும் பெறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை மொத்தமாக...
ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தபுரத்தில் கோயில் திறக்கப்பட்டு திருவிழா தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட சமூகத்தினரை பொங்கல் வைக்க அனுமதி மறுத்ததால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து திருவிழா நிறுத்தப்பட்டது. மேலும், கோயிலைப் பூட்டி போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கோயிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக கோயில் பூட்டப்பட்டதுடன், கடந்த 9 ஆண்டுகளாக...
காவலர்கள் பற்றாக்குறை காரணமாக வார விடுமுறை அரசாணை அமல்படுத்தவில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி தகவல்
admin - 0
தமிழகத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் வார விடுமுறை அரசாணையை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டிஜிபி தெரிவித்துள்ளார்.
மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவல் துறையில் பணிச்சுமை அதிகம் உள்ளதால், காவலர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிய வேண்டியதுள்ளது. போலீஸார் விடுப்பு இல்லாமல் பணிபுரிவதால், மன உளைச்சலுக்கு உள்ளாகி, மக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் ஏற்படுகிறது.
காவலர் முதல்...
அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருக்கோவிலூரில் பாஜக ஆர்ப்பாட்டம்: வானதி சீனிவாசன் பங்கேற்பு
admin - 0
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அவரது சொந்த தொகுதியான திருக்கோவிலூரில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது: பெண்கள் இருக்கும்போதே ஆபாசமாகப் பேசுவது திமுகவினரின் பழக்கம். சமுக நீதி, பெண்களுக்கான அரசு என்று கூறிக் கொண்டே பெண்களை இழிவாகப் பேசுவார்கள். நாகரிகமின்றி, வக்கிரமாகப் பேசியுள்ள பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து...
எரியுலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பா? – ஆய்வு செய்ய மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் ஹைதராபாத் பயணம்
admin - 0
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன், 7 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 பேர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட பழைய குப்பையை அகழ்ந்தெடுத்து மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள்...
பேருந்துகளில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் கேமராக்கள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
admin - 0
தமிழகத்தில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: தமிழகத்தில் விடியல் பயணத் திட்டத்தின்கீழ் இதுவரை 675 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். இதற்கான நிதியாக வரும் ஆண்டில் ரூ.3,600 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த 4...










