Google search engine
தாது மணல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் தமிழகத்தில் 12 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், வைகுண்டராஜன் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல ஆண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான தமிழக அரசின் சிறப்பு குழுவினர் தாது மணல் குவாரிகளில் சோதனை...
தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தென்தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு...
ஊட்டியில் அதிநவீன வசதிகளுடன் ரூ.130 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். ரூ.727 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் ஸ்டாலின் ரூ.494.51 கோடி மதிப்பிலான 1,703 முடிவுற்ற...
பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாலம் மற்றும் கப்பல்கள் அதை கடந்து செல்லும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ராமேசுவரம் அடுத்த பாம்பனில் பழைய ரயில் பாலத்தின் நடுவே உள்ள தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்ட...
தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம்...
நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக...
திருவண்ணாமலை மாவட்டத்தில் முட்டை கேட்ட மாணவர் தாக்கப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள செங்குளம் கொல்லைமேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுள்ள அநாகரிகமான சம்பவம் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் முட்டைகளை களவாடுவது மட்டுமின்றி தனக்கு முட்டை வேண்டும் எனக் கேட்ட மாணவனை சத்துணவு சமையளர்...
வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்.9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆர்எஸ்எஸ் உருவான ஆரம்ப காலத்தில் இருந்து அது சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைத்து வருவதை நாடறியும். வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபையும், மதச்சார்பற்ற பண்புகளையும் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு...
திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மா.பொ.சி சாலையில் ஐம்பது ஆண்டுகாலமாக காமராஜர் பெயரில் இயங்கி வந்த காய்கறி மார்கெட் புதிப்பிக்கப்பட்டு தற்பொழுது திறக்கும் தருவாயில் பெருந்தலைவர் பெயரில்லாமல் திறக்கவுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவந்த "காமராஜர் மார்க்கெட் சேதம்...
“மத்திய அரசு நமது நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை நிராகரித்தாலும், அத்தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடரும். அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் ஒரு கலந்தாலோசனைக்கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை நடைபெறும்.” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் முதல்வர் பேசியதாவது: மருத்துவப்படிப்பில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் முன்னுரிமையும், சமவாய்ப்பையும் உருவாக்கும் நுழைவுத்தேர்வு முறையை கருணாநிதி உருவாக்கினார். சமூக நீதியை நிலைநாட்டி, கிராமபுறங்களில்...