Google search engine
தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து சென்னை புறநகரை குளிர்வித்தது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் வாட்டி, வதைத்து வருகிறது. இருப்பினும் இடையிடையே, ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்து வந்தது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். மாநகராட்சி...
சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5-ம் தேதி முதல் மரக்கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை 80 லட்சமாக உள்ளது. தினமும் சுமார் 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ...
சென்னையில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி உருவாக்கியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மே 21-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, வரும் மே 21-ம் தேதி முதல்...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் வரை ஒரு பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், பூந்தமல்லி பணிமனையில் 3 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை...
ஒருவழியாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள். சில வாரங்​களுக்கு முன்பு வரை தமி​ழ​கத்​தில் திமுக, அதி​முக, பாஜக, தவெக என சிறிய கட்​சிகளுக்கு 4 வித​மான கூட்​டணி வாய்ப்​பு​கள் இருந்​தன. அது இப்​போது திமுக கூட்​ட​ணி, அதி​முக கூட்​டணி என இரண்​டாக சுருங்​கி​விட்​டது. அதி​முக, தவெக ஆப்​ஷன்​கள் இருந்​தவரை திமுக...
கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் சொன்னாலும் சொன்னார் எல்லாக் கட்சிகளும் இப்போது இதை முக்கிய அஜென்டாவாக வைக்கத் தொடங்கிவிட்டன. ​தி​முக கூட்​ட​ணிக்​குள் சலசலப்பை உண்​டாக்க வேண்​டும் அங்​கிருக்​கும் கட்​சிகளுக்​கும் சபலத்தை உண்​டாக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே கட்​சி​யின் முதல் மாநாட்​டிலேயே போகிற போக்​கில் ‘அதி​காரத்​தில் பங்​கு’ என்று கொளுத்​திப் போட்​டார் விஜய். அது இப்​போது நன்​றாகவே பற்றி எரிய ஆரம்​பித்​திருக்​கிறது. “2026-ல் தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​டணி ஆட்சி அமை​யும்”...
பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏப்.29-ம் தேதிமுதல் மே 5-ம் தேதி வரை தமிழ் வளர்ச்சி வாரமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாரதிதாசன் பிறந்த தினத்தை ஒட்டி,...
காவல், சிறைத் துறை, தீயணைப்புத் துறைக்கு புதிதாக 3,363 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது: கோவை - நீலாம்பூர், சிவகங்கை - கீழடி, திருநெல்வேலி - மேலச்செவல், திருப்பூர் - பொங்கலூர், கள்ளக்குறிச்சி - களமருதூர்,...
கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில், ரூ.968.11 கோடி மதிப்பிலான மிகைச் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று 2019- 20, 20-21 மற்றும் 21-22-ம் ஆண்டுகளில் மிகைச் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகைளை, அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளி்ன் நிதியொதுக்க கணக்குகளை பொதுக்கணக்குக் குழு ஆய்வு...
சட்​டப்​பேரவை தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக பேர​வைத்​தலை​வர் மு.அப்​பாவு அறி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான பொது பட்​ஜெட் மார்ச் 14-ம் தேதி​யும், வேளாண் பட்​ஜெட் 15-ம் தேதி​யும் தாக்​கல் செய்​யப்​பட்​டது. மார்ச் 24-ம் தேதியி​லிருந்து துறை​ ​தோறும் மானிய கோரிக்கை விவாதம் தொடங்​கி நேற்றுடன் நிறைவடைந்தது. 18 சட்ட மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. அதைத்​தொடர்ந்​து, சட்​டப்​பேர​வையை தேதி குறிப்​பி​டா​மல் ஒத்​திவைப்​ப​தற்​கான தீர்​மானத்தை துரை​முரு​கன் முன்​மொழிந்​தார். குரல் வாக்​கெடுப்பு மூலம் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதையடுத்​து,...