Google search engine
எ​திர்க்​கட்​சிகளின் கேள்​வியை தவிர்ப்​ப​தற்​காக அமைச்​சர் பொன்​முடி சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் நேற்று பங்​கேற்​க​வில்லை என கூறப்படுகிறது. தந்தை பெரி​யார் திரா​விடர் கழகம் சார்​பில் சென்​னை​யில் கடந்த ஏப்​.5-ம் தேதி நடத்​தப்​பட்ட நிகழ்ச்​சி​யில் பேசிய திமுக​ மூத்த அமைச்​சர் பொன்​முடியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு வருத்தம் தெரிவித்தும் அவரை அமைச்​சர் பதவி​யில் இருந்து நீக்க வேண்​டுமென அதி​முக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில் நேற்று கூடிய சட்​டப்​பேரவை...
திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேச பேரவை தலைவர் அனுமதிக்கவில்லை என வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பொருள் குறித்து பேச பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்காததால், அதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம்...
மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை திமுக தூண்டுவதாக, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். அப்போது அதை ஏற்காமல் பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110...
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2022-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக் கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19-ம் தேதி முதல்...
டீசல் மற்​றும் சுங்​கக் கட்டண உயர்​வைக் கண்​டித்​து, கர்​நாடக மாநில லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நேற்று வேலைநிறுத்​தப் போராட்​டத்தை தொடங்​கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரி​கள் பல மணி நேரம் நிறுத்​தப்​பட்​டிருந்​தன. கர்​நாடக மாநில லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் அறி​வித்த வேலைநிறுத்​தம் காரண​மாக நேற்று முன்​தினம் இரவு 10 மணி முதல் தமிழக பதிவெண் கொண்ட லாரி​கள் அனைத்​தும், தமிழக எல்​லை​யான ஓசூர் ஜுஜு​வாடி​யில் நிறுத்​தப்​பட்​டன.அதேநேரம், வடமாநிலங்​களி​லிருந்து கர்​நாடகா...
‘பிரதமர் மோடி எங்களுக்கு சகோதரர் போன்றவர்’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ‘மோடி ஸ்டோரி’ என்ற சேனலுக்காக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று பிரதமர் மோடி அழைப்பார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒவ்வொரு முறையும் விஜயகாந்தின் பிறந்த நாளன்று அவரே தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார். விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாதபோது என்னைத்...
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றும் விஜய் கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் பீம ஜோதியை எடுத்து செல்ல பாஜக பட்டியல் அணியினருக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. சுதந்திரத்துக்காக போராடியவர்கள், ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்டவர்களுக்கு...
தமிழ்நாட்டில் இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது. தடைக்காலத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில்...
விருதுநகர் அருகே கோயில் திருவிழாவுக்காக அலங்கார மின்விளக்குகள் கட்டும்போது மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள காரிசேரியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று 45-வது நாள் மண்டல பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கிராமத்தில் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும்...
அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அச்சப்படுகிறார் என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இழுபறி இல்லாத கூட்டணி: அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர் அம்பேத்கர். ஆனால், அரசியல் சாசன சபையில் அம்பேத்கருக்கு இடம்...