Google search engine
கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கான கொள்முதலுக்கு தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து...
தமிழக வரலாற்றிலேயே சமூக நீதியை குழிதோண்டி புதைத்த காட்டாட்சியை இதுவரை யாரும் கண்டதில்லை என திமுக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளச்சாராயத்தைக் காப்பாற்ற எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு வாங்க திமுக அரசு தயாராக இருக்கும் என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் தஞ்சாவூரில் நிகழ்ந்த பயங்கர சம்பவம். கடந்த ஏப்ரல் மாதம், நடுக்காவேரியில் கள்ளச்சாராயம் விற்பவர்களைத்...
‘மின்வாரியத்துக்கு மத்திய நிதி நிறுவனங்கள் வழங்கி உள்ள கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும்’ என, மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். தென் மாநில மின்துறை அமைச்சர்களின் மாநாடு, மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்று பேசியதாவது: ஊரக மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி)) மற்றும் மின் நிதிக் கழகம் (பிஎஃப்சி) ஆகிய...
தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், புத்தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான ‘ஜிக்சா’ தளத்தின் பயன்பாடு தமிழகத்தின் 2, 3-ம் நிலை நகரங்களுக்கும் கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘உமாஜின் - 2024’ மாநாட்டில், தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்...
 கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அமலாக்கத் துறை சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்தால் கட்டாயம் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனால், அமலாக்கத் துறை சோதனைக்குப் பின்னர் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, உண்மை...
ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு, தான் திருப்பூரை தலைமையகமாக கொண்டு நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி குளத்துப்பாளையத்தை தலைமையகமாகக் கொண்டு, பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வருபவர் ஆன்மிக பேச்சாளா் மகாவிஷ்ணு. பல்வேறு நாடுகளில் இவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு கிளைகள் உள்ளன. இவர் சென்னை அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும், முன்ஜென்மம் குறித்தும் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மகாவிஷ்ணு பிணையில் வந்த...
அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், டெல்லிக்கு படையெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவையொட்டி, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக, அதிமுகவின் கொள்கை ஒன்றுதான். அதேபோல, காங்கிரஸ், பாஜகவின் கொள்கையும் ஒன்றுதான். இவர்களிடம் கொடிகள்தான் வெவ்வேறாக உள்ளன....
பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-வது சதயவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு நேற்று பாஜக சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்து தலைவர்களையும் போற்றும் கட்சியாக பாஜக உள்ளது. 75-வது...
 ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் நகைக்கடன் பெறுவதற்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அடகு வைக்கப்படும் நகைகள் தங்களுக்குச் சொந்தமானவை என்பதற்கான சான்றை தாக்கல் செய்ய...
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்‌ஷா) திட்டம் என்பது பாலர்...