Google search engine
பழநி முருகன் கோயிலில் பாலித்தீன் கவருக்கு மாற்றாக எளிதில் மட்கும் ‘பயோ பேக்’கில் பிரசாதம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு, அதிரசம், முறுக்கு, தினை மாவு, புளியோதரை, சர்க்கரை பொங்கல், பொங்கல் தலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பக்தர்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். தினமும்...
பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்புவதற்காக 2,513 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், மே 31, ஜூன் 1 ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால், சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள்...
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடும் வகையில் பல்வேறு விதமான ராட்டினங்கள் உள்ளன. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடி விளையாடி மகிழ்வதுண்டு. தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால்...
கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை ‘தமிழ் நிலம்’ செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புவியியல் சார் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொத்துக்களுக்கு...
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து குற்றச் செயல்களுக்கும் காரணமாக போதைப் பொருள் உள்ளது. போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீரழிகின்றனர். இந்தியாவில் போதைப்பொருள் அதிகம் விற்பனை செய்யப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் சிந்தடிக் டிரக் அதிகமாக புழக்கத்தில் இருந்தபோதும், இதுவரை ஒரு கிராம்கூட...
 எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடும் கட்சிதான் திமுக என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும்,...
தமிழகத்​தில் காலி​யாக உள்ள 63 ஆயிரம் சத்​துணவுப் பணி​யாளர்​கள் பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும் என்று முன்​னாள் எம்​எல்ஏ பால​பாரதி கூறி​னார். தமிழ்​நாடு சத்​துணவு ஊழியர் சங்​கத்​தின் 16-வது மாநில மாநாடு திண்​டுக்​கல்​லில் நடை​பெற்​றது. மாநாட்டு வரவேற்​புக் குழுத் தலை​வர் சுகந்தி வரவேற்​றார். இதில் முன்​னாள் எம்​எல்ஏ பால​பாரதி பேசி​ய​தாவது: மிகக் குறைந்த ஊதி​யத்​தில் பணி செய்​யக்​கூடிய சத்​துணவு ஊழியர்​களின் உழைப்பு சுரண்​டப்​படு​கிறது. சிறப்பு கால​முறை ஊதி​யம் பெறும் சத்​துணவு ஊழியர்​களுக்​கும்,...
மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கும் நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாளப் போராட்டம்தான். அதுவே தொடர்ந்து நீடிக்க...
அடிக்கடி தேர்தல் வந்தால் அது நல்லதல்ல., ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் நிலையான அரசாங்கம் இருக்கும் என்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கூறியதாவது: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தலாம். அது எந்த அளவுக்கு மக்களுக்கு பயன் தரும். இதன்மூலம் ஒரு நிலையான அரசாங்கம் இருக்கும். திட்டங்களை கொடுப்பதில் எந்தவொரு இடையூறும்...
வட சென்னை, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர், கொடுங்கையூரில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட பழைய குப்பைகளை அகழ்ந்தெடுத்து மீட்டெடுக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு சுற்றுச்சூழல் பூங்கா வரும் என அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள்...