இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், பிரளய் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரளய் ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான சோதனைகள் அப்துல் கலாம் தீவில் ஜூலை...
இந்திய ஆட்சிப் பணியின் மத்திய சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த 1989-ம் ஆண்டு பேட்ச் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கிருஷ்ணன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அயல்பணியாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இதர நிர்வாகிகளில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் இயக்குநரான தரணி காந்தி ராம் ஐஏஎஸ்...
பிஹாரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தப் பணி மேற்கொண்டது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் சமீபத்தில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே. என்றாலும் இதனை இறுதிப் பட்டியல்...
பஹல்காமில் உள்ளூர் தீவிரவாதிகள் தாக்கி இருக்கலாம்: ப.சிதம்பரம் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு
admin - 0
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. முன்னதாக இதுகுறித்து முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சமீபத்தில் ஊடகத்துக்கு அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது “பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று ஏன் நினைக்கிறீர்கள். அதற்கு ஆதாரங்கள் இருக்கினறனவா? அவர்கள் உள்ளூரை சேர்ந்த தீவிரவாதிகளாகவும் இருக்கலாம். அந்த தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள். அவர்களை ஏன் கைது செய்யவில்லை.
பஹல்காம்...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, பாஸ்போர்ட், குடியிருப்பு சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்து உள்ளது.
இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்னாவின் சவுரி பகுதியில் ‘டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு...
உ.பி.யில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல்வரானார்.
இதையடுத்து கடந்த 2022-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் 2-வது முறையாக வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை பாஜகவுக்கு கிடைத்தது. இதுபோல, யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல்வரானார்.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத்...
கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
admin - 0
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியபோது. ஓர் அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி வர்மாவின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து அவர் அலகாபாத்...
ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்கிய மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் மோசடி: டெல்லியில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பல் கைது
admin - 0
டெல்லியில் ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க நினைத்த மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் வசிப்பவர் நீரு (62). தனியாக வசிக்கும் இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். அத்துடன் தூக்க மாத்திரையையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட்...
ஹைதராபாத்தில் இறகு பந்து (பாட்மிண்டன்) விளையாடிக் கொண்டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தின் நாகோல் உள் விளையாட்டு அரங்கில் ராகேஷ் (25) என்பவர் தனது நண்பர்களுடன் நேற்று காலையில் பாட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்டும் ஆட முயற்சித்தபோது, அப்படியே கீழே சரிந்தார். உடனே நண்பர்கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு...
உத்தர பிரதேசத்தில் கடந்த 2008 ஆகஸ்ட் 31-ல் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வழக்கில் மெயின்புரி காவல் துறையினர், 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் மெயின்புரியின் நாக்லாபந்த் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த ஓம்பிரகாஷ் என்பவர் ஒரு முக்கியமான தவறை செய்துவிட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்வீர் சிங் யாதவுக்கு பதிலாக அவரின் மூத்த சகோதரரான ராஜ்வீர் சிங் யாதவ் பெயரை...






