வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணி நடத்துகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில், 25 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். காலை 11.30 மணியளவில்...
உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 891 சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கங்கள் எண்ணிக்கை 260-லிருந்து 330 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை 674 ஆக இருந்தது. ஐந்து ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல பத்து ஆண்டுகளில்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2-வது ஆட்சி காலத்தில் இதுவரை 1,703 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1,562 பேர் ஆண்கள், 141 பேர் பெண்கள்.
அதிகபட்சமாக பஞ்சாபைச் சேர்ந்த...
மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை ஆகும். எதிர்க்கட்சிகளின் மீது அவர் முழுநம்பிக்கை வைத்தார்.
முதலில் நாடு, அதன்பிறகு மாநிலம், அதற்கு அடுத்து கட்சி, அதன்பிறகே குடும்பம். எந்தவொரு சூழலிலும் நாட்டின்...
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜவுரி பகுதிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார்.
அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூர்' நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையோரம் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மீது பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர்.
போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காஷ்மீருக்கு...
ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் புகழ்பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புனித ஷ்ராவண மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித கங்கை நீரை எடுத்துவந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் இக்கோயிலுக்கு சுமார் 35 பக்தர்கள் சென்ற ஒரு பேருந்தும் எதிரில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 18 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...
பாதுகாப்பு படை சிந்தூர் வைத்ததால் இந்தியாவின் மனைவியாகிவிட்டது பாகிஸ்தான்: ராஜஸ்தான் எம்.பி. கருத்தால் மக்களவையில் சிரிப்பலை
admin - 0
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான், இந்தியாவின் மனைவியாகிவிட்டது என்று ராஜஸ்தான் எம்பி அனுமன் பெனிவால் கூறியதை கேட்டு மக்களவையில் சிரிப்பலை எழுந்தது. ராஜஸ்தானின் நாகவூர் பகுதியை சேர்ந்தவர் அனுமன் பெனிவால்.
வழக்கறிஞரான இவர் கடந்த 2003-ல் இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2004-ம் ஆண்டில் பாஜகவில் ஐக்கியமானார். கருத்து வேறுபாடு காரணமாக 2013-ல் பாஜகவில் இருந்து வெளியேறி 2018-ல் ராஷ்டிரிய லோக்தந்ரிக் என்ற கட்சியை தொடங்கினார்.
ராஜஸ்தானின்...
இந்தியா-பாக். இடையிலான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல பிரதமருக்கு தைரியம் உண்டா? – ராகுல் காந்தி கேள்வி
admin - 0
பாகிஸ்தானுக்கு எதிரான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவர் பொய் பேசுகிறார் என்று சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் உண்டா என ராகுல் கேள்வி எழுப்பினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எதிர்க்கட்சிகள் பாறை போல உறுதியாக நின்று மத்திய அரசுக்கு...
பஹல்காம் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டது எப்படி? – ‘ஆபரேஷன் மகாதேவ்’ குறித்து புதிய தகவல்கள் வெளியீடு
admin - 0
பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்தும், `ஆபரேஷன் மகாதேவ்' குறித்த புதிய தகவல்களையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஏஐ) வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் கடந்த 3 மாதங்களாக இந்திய...
ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம் முதல் மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியான இதனை அமல்படுத்த தீவிர ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநில அரசு பஸ் போக்குவரத்து கழக (ஏபிஎஸ்ஆர்டிசி) நிர்வாக இயக்குநர் துவாரகா திருமலராவ் திருப்பதி அடுத்துள்ள வெங்கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை...










