‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை மணிகா விஸ்வகர்மா வென்றுள்ளார். வரும் நவம்பரில் தாய்லாந்தில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவில் சார்பில் அவர் பங்கேற்க உள்ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது இந்த போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 1952 முதல் மீண்டும் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடைபெற்று வருகிறது. இந்த...
பெங்களூருவில் 4 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோய் தாக்கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிகழாண்டில் ஜூலை வரை 2.81 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் அண்மையில் உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த ஏப்ரலில்...
ஜம்மு மாகாணத்தின் கிஷ்த்வார் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாகிஸ்தானில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த பகுதி 2021 வரை தீவிரவாதத்தால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது பெரிய தீவிரவாத சம்பவங்கள் மற்றும் என்கவுன்ட்டர் நடைபெறும் முக்கிய தளமாக மாறிவிட்டது.
இந்த நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை மூலம்...
கோயிலை இடித்து கட்டியதாக புகார்: உ.பி.யில் முஸ்லிம் தர்காவை சேதப்படுத்திய இந்துத்துவா அமைப்பினர்
admin - 0
உ.பி.யின் ஆக்ரா அருகிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்ளது. இங்கு மிகவும் பழமையான முஸ்லிம்களின் தர்கா உள்ளது. முகலாயர் ஆட்சிக்கால இந்த கட்டிடத்தின் உள்ளே நவாப் அப்துஸ் சமது என்பவரின் புனித சமாதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் வந்து வணங்கிச் செல்வது வழக்கம். இந்த இடம், உ.பி. அரசின் நிலப் பதிவுகளில் கஸ்ரா எண் 753-ன் கீழ் மக்பரா மங்கி (தேசிய...
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கான இலவச அரசு பேருந்து பயண திட்டம் ‘ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிபந்தனைகள் நேற்று வெளியானது.
இதன்படி, பல்ல வெலுகு, (நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு இயக்கும் பேருந்து) அல்ட்ரா பல்ல வெலுகு, நகர பேருந்துகள், மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இயக்கப்படும்...
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், ஆள்ளகட்டா சட்டமன்ற தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் அகிலபிரியா. இவர் இளம் வயதிலேயே ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக கடந்த சந்திரபாபு ஆட்சியின் போது பதவி வகித்தார்.
நடிகை ரோஜா, பதவி வகித்த சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாடு துறையின் அமைச்சராகவே அகில பிரியாவும் பதவி வகித்தார். இந்நிலையில், நேற்று அவர் கர்னூலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், நடிகை ரோஜா அமைச்சராக...
‘வாக்கு திருட்டு’ தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
‘‘மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள மகாதேவபுரா தொகுதியிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக...
திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்து வந்த 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
இதன்படி, பல சிக்கலான நடைமுறைகள் நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு...
வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு இலவச தமிழ்ப் பாடநூல் விநியோகம் நிறுத்தம்: தமிழக அரசின் நிதி நெருக்கடியால் பல ஆண்டு திட்டம் ரத்து
admin - 0
நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ் குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்றனர்.
சில மாநிலங்களில் தனியாக நிர்வாகிக்கப்படும் தமிழ்வழிக் கல்விக்கான பள்ளிகளும் 12 -ம் வகுப்பு வரை நடைபெறுகின்றன. இவற்றுக்கு 1 முதல் 12 வகுப்புகள் வரை தேவைப்படும் தமிழ்நாட்டு அரசு பாட நூல்கள் இலவசமாகக் கிடைத்து வந்தன. இதன் விநியோகத்தை நடப்பாண்டு...
பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
admin - 0
பெங்களூருவில் மெட்ரோ ரயிலின் மஞ்சள் பாதையையும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஐடி ஊழியர்களும் ஓசூர் பயணிகளும் பெருமளவில் பயனடைவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அங்கிருந்து பெங்களூரு கெம்பேகவுடா ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ...









