மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்னுடன் நட்புடன் பழகிய அரசியல்வாதி ஒருவர் எனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பி, ஓட்டல் அறைக்கு அழைத்தார். காங்கிரஸில் இருப்பவர்கள் உட்பட மேலும் பல பெண்களுக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
அரசியல்வாதியின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார். என்றாலும் அது பாலக்காடு எம்எல்ஏவும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் தான் என...
சென்ற 2024-25-ம் நிதியாண்டில் தேவையை விட அதிக ரத்தம் சேகரிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 2024-25-ம் ஆண்டில், இந்தியா 1,46,01,147 யூனிட் ரத்தத்தை சேகரித்தது. இது ஆண்டுத் தேவையான 14.6 மில்லியன் யூனிட்களை விட அதிகமாகும். மேலும் 2023-ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட 1,26,95,363 யூனிட் ரத்தத்தை விட 15% அதிகமாகும்.
இந்தியாவில்...
வடகிழக்கு மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவரின் சான்றிதழ்களில் பெயர், பாலினத்தை மாற்ற நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை மருத்துவரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும், பெயர் மற்றும் பாலினத்தை ஒரு மாதத்துக்குள் மாற்றி வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்தவர் பியான்சி லாய்ஷ்ராம். இவர் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த முதல் திருநங்கை மருத்துவர். போபாய் லாய்ஷ்ராம் என்ற பெயரில் ஆணாக இருந்தவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலின அறுவை சிகிச்சை மூலம் திருநங்கையாகி மாறி அந்த சான்றிதழ் மூலம் ஆதார் எண்,...
கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்கள், முறைகேடுகள் குறித்து நீதிபதி ஷா ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியதில் பலத்தை பிரயோகித்தது குறித்தும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரத்தை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பகிர்ந்து கொண்டார்.
இது...
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைப்படி, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நித்ய அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த ஜெகன் ஆட்சியில் திருமலையில் அவரது கட்சிக்காரர்கள் 12 பேருக்கு ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, இ-டெண்டர் மூலம் ஓட்டல்களை ஒதுக்கி உள்ளோம்.
ஸ்ரீவாணி...
மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள கோர்கி கிராமத்தில் பழமையான காஜி மியான் தர்கா உள்ளது. குர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவுக்குள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இரவு நேரத்தில் புகுந்துள்ளது. உள்ளே இருந்த தர்காவின் மஸார் எனும் சமாதியை கும்பல் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
மறுநாள் காலை தர்கா சேதம் அடைந்துள்ளதை பார்த்து உள்ளூர் முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
உள்ளூர் மக்கள்...
குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிப்பது போல் வந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார். அங்கு குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர் முதல்வரிடம் புகார் மனு அளிக்க வந்தார்.
அவரை காவலர்கள் சோனை செய்து அனுப்பினர். மனு அளிக்க...
மும்பையில் தொடரும் கனமழை காரணமாக அரசு அலுவலங்கள், தனியார் நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு தனியார் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் புரண்டோடியது. மேலும் முக்கிய சாலை சந்திப்புகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின்...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த விஸ்வநாத் குடும்பத்தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடராஜ் நரேந்திர குமார் மற்றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்ளனர்.
இதுதொடர்பாக விஸ்வநாத் குடும்பத்தினர் திருமலை விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார்...
நாடு முழுவதிலும் ரயில்களில் செல்லும் பலர் பெருமளவு சுமைகளை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதில் அவர்கள் உடைமைகள் தவிர வேறு பல பொருட்களையும் சுமையாக எடுத்துச் செல்கின்றனர். தற்போது வீட்டு உபயோகப் பொருட்களை தவிர்த்து வியாபாரப் பொருட்ளுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
இந்த சூழலில், இனி ரயில் பயணிகள் அனைவருக்கும் சுமை கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. தற்போது விமானப் பயணிகளுக்கு குறிப்பிட்ட எடைக்கு மேற்பட்ட சுமைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது....










