Google search engine
 உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்ட காசோலை மோசடி வழக்கு ஒன்​றில் நீதிப​தி​கள் அரவிந்த் குமார், சந்​தீப் மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: காசோலை மோசடி வழக்​கில் ஒரு​வர் நீதி​மன்​றத்​தால் தண்​டிக்​கப்​பட்ட பிறகு புகார்​தா​ரருடன் சமரசம் செய்து கொண்​டால் சிறை தண்​டனையை தவிர்க்​கலாம். இரு தரப்​பினர் இடையே சமரச ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​விட்​டால், என்ஐ சட்​டத்​தின் (Negotiable Instruments Act) பிரிவு 138-ன் கீழ் விதிக் கப்​பட்ட...
பஞ்​சாப் மாநிலத்​தில் வெள்ள நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. இதனால், கல்வி நிறு​வனங்​களுக்கு செப்​டம்​பர் 7-ம் தேதி வரை விடு​முறை அறி​வித்து அம்​மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து கல்​வித் துறை அமைச்​சர் ஹர்​ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறுகை​யில், “ மாநிலத்​தின் வெள்ள நிலை​மையை கருத்​தில் கொண்டு முதல்​வர் பகவந்த் சிங் மான் அறி​வுறுத்​தலின்​படி பஞ்​சாப் முழு​வதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும், அங்​கீகரிக்​கப்​பட்ட மற்​றும் தனி​யார் பள்​ளி​கள், கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​கள்,...
சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ கூட்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இப்​போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபை​யில் சீர்​திருத்​தங்​கள் செய்​யப்பட வேண்​டும். குறிப்​பாக ஐ.நா.​வின் ஆட்சி மன்ற அமைப்​பு​களில் வளரும் நாடு​களுக்கு போதிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கப்பட வேண்​டும். ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம் என்ற கொள்​கையை எஸ்​சிஓ...
கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ஜலாலா​பாத் அரு​கில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கத்​தால் குனார் மாகாணம் மிக கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. இங்கு பெரும்​பாலான வீடு​கள், மண், பாறை​களை கொண்டு கட்​டப்​பட்​டிருந்​த​தால், நிலநடுக்​கத்தை தாக்​குப் பிடிக்க முடி​யாமல் அவை இடிந்து விழுந்​தன. பாதிக்​கப்​பட்ட இடங்​களில் உள்​ளூர் மக்​கள் உதவி​யுடன் மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில்...
தெலங்​கானா மாநிலத்​தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்​எஸ்) கட்​சி​யின் தலை​வர் கே. சந்​திரசேகர ராவ் தலைமையி​லான ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை​யின் ஒரு தூண் சரிந்​த​தால், தற்​போதைய காங்​கிரஸ் அரசு இது தொடர்​பாக விசா​ரணை நடத்​தி​யது. மேலும், இதுகுறித்து சிபிஐ விசா​ரணைக்​கும் உத்​தர​விட்​டுள்​ளது. பிஆர்​எஸ் ஆட்​சி​யில் கட்​டப்​பட்ட காலேஷ்வரம் அணை, அப்​போதைய ஆட்​சி​யாளர்​களால் கமிஷன் பெறப்​பட்​டு, தரமின்றி கட்​டப்​பட்​ட​தாக தற்​போதைய காங்​கிரஸ் அரசு குற்​றம் சாட்டி வரு​வதோடு, இதற்​காக சிபிஐ...
 மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனை செயல்​பட்டு வருகிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்ள என்​ஐசியூ எனப்​படும் நியூநேட்​டல் இன்​டென்​சிவ் கேர் யூனிட்​டில்​(பச்​சிளம் குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவு) பச்​சிளம் குழந்​தைகள் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தன. இந்​நிலை​யில் இந்​தப் பிரி​வில் இருந்த 2 பச்​சிளம் குழந்​தைகளை, எலிகள் கடித்​துக் குதறி​யுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இந்த மருத்​து​வ​மனை​தான் மத்​திய பிரதேச மாநிலத்​திலேயே மிகப்​பெரிய மருத்​து​வ​மனை என்று பெயர் பெற்​ற​தாகும். அந்த...
கர்​நாட​கா​வில் உள்ள மைசூரு​வில் அகில இந்​திய பேச்சு மற்​றும் செவித்​திறன் நிறு​வனத்​தின் வைர விழா நேற்று நடைபெற்​றது. இதில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, கர்​நாடக ஆளுநர் தாவர்​சந்த் கெலாட், முதல்​வர் சித்​த​ராமை​யா, மத்திய சுகா​தார இணை அமைச்​சர் அனுபிரியா படேல், கர்​நாடக சுகா​தார அமைச்​சர் தினேஷ் குண்டு ராவ், பாஜக எம்​.பி. யது​வீர் வாடியார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். விழா​வில் முதல்​வர் சித்​த​ராமையா கன்​னடத்​தில் உரை​யாற்​றி​னார். அவர் தனது உரையை...
பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதான ஆம் ஆத்மி எம்​எல்ஏ துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பியோடி​யுள்​ளார். அவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப் பேரவை தொகு​தி​ ஆம் ஆத்மி எம்​எல்​ஏ​ ஹர்​மீத் பதன்​மஜ்​ரா மீது, ஒரு பெண் போலீ​ஸில் புகார் கொடுத்​திருந்​தார். அதில், ‘தனது மனை​வியை விவாகரத்து செய்​து ​விட்​ட​தாக பொய் சொல்லி எம்​எல்ஏ ஹர்​மீத் என்​னுடன் தொடர்பு வைத்​திருந்​தார். மேலும், என்னை பாலியல் வன்​கொடுமை செய்​ததோடு, மிரட்​டல்,...
ம​கா​ராஷ்டி​ரா​வில் மராத்தா சமூகத்​தினர் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். இந்த சமூகத்​தில் 96 குலி மராத்​தா, குன்பி ஆகிய இரு பிர​தான பிரிவு​கள் உள்​ளன. இதில் 96 குலி மராத்தா முன்​னேறிய வகுப்​பின​ராக​வும், குன்பி சமு​தா​யத்​தினர் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பின​ராக​வும் (ஓபிசி) அங்​கீகரிக்​கப்​பட்டு உள்​ளனர். இந்த சூழலில் 96 குலி மராத்தா பிரி​வினரை​யும் ஓபிசி பிரி​வில் சேர்க்க வேண்​டும் என்று மராத்தா சமு​தாய தலை​வர் மனோஜ் ஜாரங்கே பாட்​டீல் கோரிக்கை விடுத்​துள்​ளார். இதை முன்​னிறுத்தி...
ஆந்​திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்​டத்​தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரி​யில் கரைக்க டிராக்​டரில் ஊர்​வல​மாக கொண்டு சென்​றனர். வழி​யில் டிராக்​டரை டிரைவர் ஓரமாக நிறுத்​தி​விட்டு தண்​ணீர் குடிக்​கச் சென்​றார். அப்​போது கூட்​டத்​தில் இருந்த ஒரு சிறு​வன் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்​றார். இதில் டிராக்​டர் தாறு​மாறாக ஓடி 4 பேர் மீது ஏறி இறங்​கிய​தில் நால்​வரும் பரி​தாப​மாக...