பாலியல் வன்கொடுமையை மறைக்க ஒடிசா மதரஸாவில் படிக்கும் மாணவன் கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது
admin - 0
ஒடிசா மாநிலத்தில் உள்ள மதரஸா ஒன்றில் 16 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பயிலும் சிறுவனை, அங்கு படிக்கும் மற்ற மாணவர்கள் 5 பேர் கடந்த 6 மாதமாக தகாத உறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப்போவதாக சிறுவன் மிரட்டியுள்ளான். இதனால் அந்த சிறுவனை கொலை செய்ய மதரஸா மாண வர்கள் 5 பேர் முயற்சித்தனர். சில நாட்களுக்கு முன் அந்த சிறுவனை தண்ணீர் தொட்டியில் தள்ளி...
உத்தர பிரதேசத்தில் திருமணமான மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு அளிக்கும் சட்டம் வருகிறது. இதன் மீது முக்கிய முடிவெடுக்கத் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தயாராகிறது.
உத்தர பிரதேசத்தில் வருவாய் சட்டம்-2006-ன் பிரிவு 108 (2)-ன் கீழ், நில உரிமையாளர் இறந்த பிறகு, அந்த நிலம் அவரது மனைவி, மகன் மற்றும் திருமணமாகாத மகளின் பெயருக்கு மட்டுமே மாற் றப்படுகிறது. இதில் திருமணமான மகள்களுக்கு உரிமை இல்லை. இந்த விதியை...
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த ராமச்சந்திர ராம், ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டம் லொட்வா கிராமத்துக்கு சென்று கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிங்கி தேவி.சமீபத்தில் பெய்த கனமழையால் இவர்கள் தங்கியிருந்த குடிசை சேதமடைந்துள்ளது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள். ஒரு மாதம் முன்பு 5-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அதிலிருந்து தேவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால், தங்களுடைய ஒருமாத...
பாஜக எம்பி.க்களின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கும் பாஜகவின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இதில், ஜிஎஸ்டியில்...
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பெரிய கன்டெய்னர் லாரிகளில் பசுக்கள் ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் நவடா கிராமத்துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த 4-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே, பசுக்களை நவடா கிராமத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் பசுக்களை மடக்கி...
கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட வாய்த்தகராறு அடி தடியில் முடிவடைந்தது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியில் உள்ள அனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்கீதா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்படி சங்கீதா கூறியுள்ளார்.
ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன்...
மகாராஷ்டிர அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் இந்தியாவின் டெஸ்லா ‘ஒய்’ மாடலின் முதல் கார் ஒப்படைப்பு
admin - 0
மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஷோரூமில் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் அதன் முதல் ஷோரூமை திறந்தது. அப்போது இந்த “ஒய்” மாடல் காரை அமைச்சர் பிரதாப், தனது பேரனுக்கு பரிசாக கொடுப்பதற்காக...
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம் அடைந்தனர். இத்துயர சம்பவத்தை தொடர்ந்து இங்கு படிக்கும் 50 மாணவர்களுக்கு வகுப்பறையின்றி அவர்களின் படிப்பு தடைபட்டது.
அப்போது மாணவர்களின் எதிர்காலம் கருதி அதே கிராமத்தை சேர்ந்த மோர் சிங் (60) என்று விவசாயத் தொழிலாளி தனது 2 படுக்கை...
உயர் ரக கார்கள், புகையிலை, சிகரெட்டுகள், குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு வரியாக 40 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரிஉயர்வுக்கு உடல் பருமன் குறைப்பு நிபுணரும், பெங்களூரு ஆஸ்டர் ஒயிட்பீல்ட் மருத்துவமனை ஆலோசகருமான டாக்டர் பசவராஜ் எஸ். கம்பர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்கு முக்கிய பங்களிக்கும் சர்க்கரை மற்றும் காஃபின் கொண்ட பானங்களை...
மும்பை நிழல் உலக தாதாக்களுக்கு சவாலாக இருந்த அருண் காவ்லிக்கு 17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்
admin - 0
மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்ளிட்டோருக்கு சவாலாக இருந்தவர் அருண் காவ்லி (76). இவர் தனது ஆதரவாளர்களால் ‘அப்பா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
இவர் வசித்த மும்பை, பைகுல்லா பகுதியின் தக்டி சாலை இவரது கோட்டையாக இருந்தது. ஓர் எளிய மராத்தி குடும்பத்திலிருந்து உயர்ந்து...










