மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் மகா யுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கூட்டணியிலும் முதல்வர் வேட்பாளர் முன்னிறுத்தப்படவில்லை. இச்சூழலில், இரண்டு கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சித் தலைவர்கள் முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளனர். எனினும், எம்விஏ கூட்டணியில் சிவசேனாவின் (யூபிடி) உத்தவ் தாக்கரேவும், மகா யுதியில் சிவசேனாவின்...
ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ராகேஷ் குமார் உயிரிழந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பரோங் கிராமத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது. ஜெய் ஹிந்த் என உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பியதுடன் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ராகேஷ் குமாரின்...
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20...
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று (நவ.13) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அப்போது வாக்காளர்கள் வருகை மிதமாக இருந்தது. வயநாடு தான் பிரியங்கா காந்திக்கு தேர்தல் அரசியல் பிரவேசம் என்பதால் இத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வயநாட்டின் சுல்தான் பத்தேரி, கல்பேட்டா, மானந்தவாடி, மலப்புரம் மாவட்டத்தின் எரநாடு, நீலாம்பூர், வாண்டூர், கோழிக்கோட்டின் திருவம்பாடி என வயநாடு...
உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் கடந்த 10-ம் தேதி ஓய்வு பெற்றார். முன்னதாக, அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 51-வது...
மணிப்பூரின் ஜிரிபாம் பகுதி காவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தமோதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம்ஆண்டு மே மாதம் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 237...
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகாயுதிகூட்டணியில் தேர்தலை சந்திக்கின்றன. அதேபோன்று எதிர் தரப்பில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியில் களம் காண்கின்றன. இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு...
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த வனப்பகுதிக்கு மலையேற்றம் சென்ற இருவர் என்கவுன்ட்டர் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். பாறைகளில் பதுங்கிக்கொண்ட இருவரும் 100-க்கு டயல் செய்துதங்கள் இருப்பிடம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்....
காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசு அபாய அளவை எட்டிஉள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையில் இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்த 2 கூட்டணிகளிலும் போட்டியிடும் சில வேட்பாளர்களின் வெற்றியில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்கள் 7 பேரின் கவுரவம் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஜார்க்கண்டின் தற்போதைய முதல்வரும் ஜேஎம்எம்...